உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் முகேஷ் அம்பானி ; எத்தனையாவது இடம் தெரியுமா.?

உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி.
கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் இந்திய பொருளாதாரம் பாதிப்பு அடைந்த போதும், ரிலையன்ஸ் நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட்டில், பேஸ் புக், ஜெனரல் அட்லாண்டிக், சவுதி, யுஏஇ போன்ற நிறுவனங்கள் பெருமளவு முதலீடு செய்தன. இதனால் ரிலையன்ஸில் பங்கு மூலதனம் அதிகரித்து முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக உள்ள இவரது சொத்து மதிப்பு சுமார் 4 லட்சத்து 90 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனரின் குறியீட்டின்படி, அம்பானியின் நிகர மதிப்பு 64.5 பில்லியன் டாலராக உயர்ந்து உலகளவில் ஒன்பதாவது பணக்காரர் என்ற பெருமையைப் பெற்ள்ளது. முதல் 10 இடங்களில் உள்ள ஆசிய அதிபர் அம்பானி மட்டுமே.ரிலையன்ஸ் நிறுவனமானது இந்திய நிறுவனங்களில் 150 பில்லியன் டாலர்கள் என்ற சந்தை மதிப்பை தொட்ட முதல் நிறுவனம் என்ற பெயரினை பெற்றுள்ளது. தற்போது இந்திய மதிப்பில் அது 11 லட்சத்து 43 ஆயிரத்து 667 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 160.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பில்லியனர்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளார். அவரைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் (108.6 பில்லியன் டாலர்), எல்விஎம்ஹெச் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பெர்னார்ட் அர்னால்ட் (102.8 பில்லியன் டாலர்), பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (87.9 பில்லியன் டாலர்), பெர்க்ஷயர் ஹாத்வே தலைவர் வாரன் பபெட் (71.4 பில்லியன் டாலர்), முன்னாள் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் (570.5 பில்லியன்), கூகிள் இணை நிறுவனர் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (168.1 பில்லியன் மற்றும் billion 66 பில்லியன்) கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...