கொரோனாவால் உயிரிழந்தோரை நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா..!

சமூக நலன்தமிழகம்

கொரோனாவால் உயிரிழந்தோரை நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா..!

கொரோனாவால் உயிரிழந்தோரை நல்லடக்கம் செய்த  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி (ஜூன் 11) ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,716 ஆகவும், பலி எண்ணிக்கை 349 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையை அடுத்த திருவெற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ஒருவர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார்.

அவரின் உடலை நல்லடக்கம் செய்ய உறவினர்கள் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா வின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி கோரியதை தொடர்ந்து உயிரிழந்த நபரின் உடலை அரசின் சட்ட விதிகளுக்குட்பட்டு திருவெற்றியூர் அடக்க ஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்.

செய்தி
பி.எஸ்.கனி

Leave your comments here...