ஏ.கே.47. கையெறி குண்டுகள் பறிமுதல் : பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடித்த பஞ்சாப் போலீஸ்..!

இந்தியா

ஏ.கே.47. கையெறி குண்டுகள் பறிமுதல் : பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடித்த பஞ்சாப் போலீஸ்..!

ஏ.கே.47. கையெறி குண்டுகள் பறிமுதல் : பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடித்த பஞ்சாப் போலீஸ்..!

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடவிருந்த பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை பஞ்சாப் போலீசார் முறியடித்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் தொடர்ந்து பயங்கரவாதிகளில் அடிக்கடி ஊடுருவி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்காக காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக உளவுதுறை தகவல்கள் வெளியானது. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எல்லையில் இந்திய வீரர்கள் மற்றும் மாநில போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த இருவரும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு ஆயுதங்களை கடத்தி அங்கு சதி திட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் பஞ்சாப் போலீசார் இருவரையும் மடக்கி பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி ஒன்று, 10 கையெறி குண்டுகள், 60 தோட்டாக்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதனால் பஞ்சாப் போலீசார் பயங்கரவாதிகள் நடத்த இருந்து சதி திட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Leave your comments here...