இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இழுக்கும் பயங்கரவாத அமைப்புகள் : ஜ.நா பொது செயலர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை..!!

உலகம்

இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இழுக்கும் பயங்கரவாத அமைப்புகள் : ஜ.நா பொது செயலர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை..!!

இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இழுக்கும் பயங்கரவாத அமைப்புகள் : ஜ.நா பொது செயலர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை..!!

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் கோபத்திலும் விரக்தியிலும் உள்ள இளைஞர்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன’ என ஐ.நா. பொது செயலர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பயங்கரவாத அமைப்புகள் இணையதளம் மூலம் இளைஞர்களைக் கவரும் முயற்சிகளை அதிகரித்து வருகின்றன.சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வைப் பரப்பும் பதிவுகளை வெளியிடுவது, தற்போது இணையதளத்தில் அதிக நேரம் செலவிடும் இளைஞர்களை தங்களது அமைப்புகளில் இணையச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை பயங்கரவாத அமைப்புகள் தீவிரப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் 5-இல் ஒரு இளைஞர் படிப்பறிவோ, உரிய தொழில் கல்வி இல்லாமல், வேலைவாய்ப்பற்று உள்ளார். நான்கில் ஒரு இளைஞர் உள்நாட்டுச் சண்டை மற்றும் வன்முறை மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், சிறார் பருவத்தைத் தாண்டாத 1.2 கோடி பெண்கள் தயாராகின்றன

இதன் காரணமாக, அரசியல் கட்டமைப்புகள் மீதும், சமூக அமைப்பின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விடுகிறது. இத்தகைய சூழல்களுக்கு இடையே, அவர்கள் பயங்கரவாதிகள் எளிதில் கவர்ந்து தங்களது அமைப்பில் இணைத்துக் கொள்ள முடிகிறது.கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இளைஞர்களில் தலைமுறையினரே தங்களது எதிர்காலத்தைத் தொலைத்து விடும் நிலையை நாம் அனுமதிக்கக் கூடாது என்று குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

Leave your comments here...