டெல்டா மாவட்ட மக்களுக்கு ஒரு நல்ல செய்தி..!! இனிமேல் தடையின்றி மின்சாரம் வழங்க புதிய ஏற்பாடு ; மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு

தமிழகம்

நெய்வேலி துணை மின்நிலையம் மற்றும் கடலங்குடி இடையேயான 77.31 கிலோ மீட்டர் நீள 230 கிலோ வோல்ட் புதிய மின்பாதை கடந்த 27-ந்தேதி செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையேயும் ஏற்கனவே நடைபெற்று கொண்டிருந்த பணிகளின் இறுதிகட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் கடந்த ஒருவார காலமாக மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- 230 கி.வோ திறன் கொண்ட நெய்வேலி துணை மின்நிலையம் மற்றும் கடலங்குடி (திருவாரூர் மாவட்டம்) இடையேயான 77.31 கிமீ நீள புதிய மின்பாதை நேற்று (ஏப்ரல் 27) இரவு முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கும் எனவும் இந்த பணிகள் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையேயும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

100.82 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த புதிய மின் வழித்தடம் செயல்பாட்டிற்கு வந்திருப்பது, மின்னழுத்தத்தை மேம்படுத்தி விவசாயம் தங்குதடையின்றி நடைபெற உதவும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Leave your comments here...