ரெயில் நிலையங்களில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் 6 அடி இடைவெளியில் கோடுகள் ..!

தமிழகம்

ரெயில் நிலையங்களில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் 6 அடி இடைவெளியில் கோடுகள் ..!

ரெயில் நிலையங்களில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் 6 அடி இடைவெளியில் கோடுகள் ..!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியன் ரெயில்வே, தனது பிறந்த நாளன்று கூட ரெயில் சேவைகளை இயக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. அருங்காட்சியகத்தில் உள்ள காட்சி பொருட்கள் போலவே பணிமனைகளிலும், ரெயில் நிலையங்களிலும் ரெயில்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அந்தந்த ஊர்களிலேயே அகதிகள் போல இருந்து வருகிறார்கள்.எப்போது ஊரடங்கு முடிவுக்கு வரும்? எப்போது ரெயில் சேவை தொடங்கும்? அதில் ஏறி எப்போது சொந்த ஊர்களுக்கு செல்லலாம்? இத்தனை நாட்கள் பட்ட கஷ்டம் எப்போது ஓயும்? என்று வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் ஊரடங்கு முழுமையாக முடிந்து, ரெயில் சேவை தொடங்கப்படும் பட்சத்தில் என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அதற்கான பணிகளையும் முன்னெடுத்து வருகிறார்கள். அந்தவகையில் சென்னை எம்.ஜி. ஆர். சென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட நீண்ட தூர ரெயில்கள் புறப்படும் ரெயில் நிலையங்கள், புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் 6 அடி இடைவெளியில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கோடுகள் வரையப்பட்டு இருக்கிறது.

டிக்கெட் கவுண்ட்டர், பயணிகள் காத்திருப்பு இடம், நடைமேம்பாலம், பிளாட்பாரம் என ரெயில்வே வளாகம் முழுவதும் பிரதான இடங்களில் 6 அடி இடைவெளியில் இந்த கோடுகள் வரையப்பட்டு இருக்கின்றன.இந்த கோடுகள் வரையப்பட்டுள்ள இடைவெளியில் நின்றே இனி ரெயில் நிலையங்களில் பயணிகள், ரோபோ போல நடமாட முடியும். அதாவது ஒருவர் நகர்ந்தால் தான், இன்னொருவர் முன்னோக்கி செல்ல முடியும். இதன்மூலம் தேன் கூட்டை சுற்றி மொய்க்கும் தேனீக்கள் போல இனி ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டத்தை பார்க்க முடியாது.கொரோனா என்ற கொடூர அரக்கன் தமிழகத்தை விட்டு நடையை கட்டும் வரை, ரெயில் நிலையங்களில் ஒருவர் பின் ஒருவர் வரிசையாக நின்று சமூக இடைவெளியை கடைப்பிடித்தாக வேண்டும். ரெயில் பெட்டிகள் வரிசையாக நிற்பது போன்று, பயணிகளும் இனி வரிசையாக நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.

Leave your comments here...