உயிர் பலி வாங்கும் தேசிய நெடுஞ்சாலை…? கண்டு கொள்வார எம்பி.வசந்தகுமார்…? பொதுமக்கள் ஆதங்கம்…!!
- August 12, 2019
- admin
- : 1056
நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லுக்குறியில் உள்ள பாலத்தின் மேல் பகுதியில் கால்வாய் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் தார் போடும் போதெல்லாம் சாலையின் மட்டம் உயர்ந்தது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் கன ரக வாகனங்கள் மேலே உள்ள பாலத்தை உரசியபடியே சென்றன.
அதன்பிறகு கனரக வாகனங்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2014 நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற மத்திய இணையமைச்சர் ஆனார் பொன்.ராதாகிருஷ்ணன் . அவரின் முயற்சியில் வில்லுக்குறி பாலத்தின் கீழ் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது பாலத்தின் கீழ் உள்ள சாலையை ஆழப்படுத்தி காங்கிரீட் தளம் அமைத்து கனரக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்வது என்று முடிவு செய்தனர். பின்னர் அதற்கான வேலைகளும் நடைபெற்று அவரது முயற்சியில் 3 அடுக்கு என்ற முறையில் தரமான சாலையாக உருமாற்றபட்டது கூடவே அவ்வப்போது சீரமைக்கப்பட்டு மக்கள் பயண்பாட்டுக்கு விடப்பட்டது.
தற்போது குமரி மாவட்டத்தில் மழை பெய்த வருவதால் தக்கலை முதல் சுங்கன்கடை வரையிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உயிர் பலி வாங்கும் அளவிற்கு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதியில் புதிய காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் அவர்கள் இதனை கண்டு கொள்வார என்பதே குமரி மக்களின் ஆதங்கமாக உள்ளது. விபத்தில் சிக்கி தினந்தோறும் உயிரை பலி வாங்கும் நிலையிலிருந்து விடிவு கிடைக்குமா…? என்பதே நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை பயணிக்கும் வாகன ஓட்டிகளின் கேள்வியாக இருக்கிறது
நமது நிருபர்
சக்தி ஆதிரா
Leave your comments here...