அத்திவரதர் வைபவமும் தடுமாறும் தமிழக அறநிறைதுறையும்….!
- August 12, 2019
- admin
- : 1260
அத்திவரதரை வழிபட வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தே போகிறது தமிழக அறநிலைதுறை உண்மையில் பக்தர்களை சமாளிக்க மிகவும் திணறுகிறது என்பதே உண்மை. இத்தனை கூட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை முகநூல், யூடியூப், போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அத்திவரதர் அதிக பிரபலமடைந்து விட்டார். அது போக இப்போது பார்க்கவில்லை எனில் இனி நாற்பது வருடம் கழித்தே தரிசனம் கிடைக்கும் என்பதால் அதிக கூட்டம் வர தொடங்கியது. தமிழகத்தை தாண்டி ஆந்திரா கர்நாடகா கேரளா ஏன் வட மாநில மக்கள் கூட வந்து தரிசிக்க தொடங்கினர்.
இத்தனை லட்சம் மக்கள் வருகை தரும்போது அதற்கு தேவையான ஏற்பாடுகளை முழுமையாக செய்யவில்லை தமிழக அறநிலைதுறை. குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரையிலும் ஆகிறது தரிசனம் செய்ய 8 மணி நேரமாக ஒரு இடத்திலும் உட்கார முடியவில்லை அத்தனை கூட்டம் சமாளிப்பது கடினம்தான்.
சில தேவைகள் இல்லை அதை குறையாக கருதவில்லை ஆனால் அந்த தேவைகள் இருந்தால் நிறைவாக இருந்து இருக்கும். சமாளிப்பதும் எளிமையாக இருந்து இருக்கும்…
1.ஆண், பெண், முதியோர் என தொடக்கம் முதல் இறுதி வரை வரிசை பிரித்து அனுப்பினால் பெண்கள் கஷ்டபடாமல் வருவார்கள்.ஆண் துணையோடு வருபவர்கள் வேண்டுமானால் ஆண்கள் பிரிவில் அனுமதித்து இருக்கலாம்
2.திருப்பதி போன்ற கோவில்கள் போல் அங்காங்கே அமர்ந்து அனுப்பினால் அதிக கஷ்டம் தெரியாது ஆனால் மொத்தமாக நின்று கொண்டே செல்ல வேண்டியுள்ளது கோவில் கோபுரம் அருகே மட்டும் சிறிது நேரம் அமர முடிகிறது.
3.கோவிலுக்கு உள்ளே சென்றதும் ஒரு 20பெரிய வரிசையாக பிரித்து அனுப்புகின்றனர் அந்த பகுதி சுகாதரமாக இல்லை மழை பெய்து தண்ணீர் கெட்டி அதில் பிளிச்ங் பவுடர் போட்டு அந்த கெட்ட வாசனை வேறு. அந்த வரிசையில் Restroom செய்பவர்கள் வரிசை மாறி ஏறுகின்றனர் அதை தடுக்க காவல்துறை அங்கு இல்லை
4.வருத்தமான விசயம் பல காவல்துறை நண்பர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்கள் வந்தால் குறுக்கே அனுப்புகின்றர்.அல்லது முதியோருக்கான வரிசையில் முறைகேடாக அனுப்புகின்றர்.தடுப்புகள் முறையாக இல்லை .குறுக்கே புகுந்து செல்படியே இருக்கிறது பலர் குறுக்கே புகுந்து செல்கிறர் அதை தடுக்க காவல்துறை இல்லை.
5.தமிழகத்தை தாண்டியும் பல மொழி பேசும் மக்கள் வருகின்றனர் . அவர்களுக்கு புரியும் மொழியில் அறிவுப்புகள் இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.(தெலுங்க கன்னடம் மலையாளம் ஹிந்தி பேசுபவர்களை நேற்று வரிசையில் அதிகமாக கண்டேன். தெலுங்கர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டினை குறை சொல்லி கொண்டே இருந்தே இருந்தது கொஞ்சம் புரிந்தது. திருப்பதி கோவில் தரிசனத்தை ஒப்பிட்டு குறையாக கூறினார்கள்.)
6.முதியோர் வரிசை 300ரூபாய் தரிசன வரிசை பொது வரிசை அருகேயே இருப்பதால் சிலர் பொது வரிசையில் இருந்து திருட்டுதனமாக முதியோர் வரிசையில் செல்கிறார்கள். பொது வரிசையில் வந்த பல முதியவர்களுக்கு முதியோர்களுக்கு தனி வரிசை இருப்பதே தெரியவில்லை.
7.அன்னதானம் தயிர்சாதம் மற்றும் புளியோதரை கொடுத்தார்கள் ஆனால் பெரும்பாலான மக்களுக்கு அது பயன்படவில்லை சரியான இடத்தில் வைத்து வழங்கபடவில்லை. கூட்டத்தின் ஓரத்தில் வைத்து கொடுக்கபட்டால் யாரும் சாப்பிட ஆர்வம் காட்டவில்லை
8.வெளியே இருந்து கோவில் உள்ளே வரும் செட் போடப்பட்டிருந்த பகுதியில் உள்ளே இருப்பது போல் பேன் வசதி செய்திருந்திருக்கலாம்.அதே போல் அந்த பகுதியில் குடிநீர் காசு கொடுந்து வாங்கும் நிலையே இருந்தது.
9.விஐபி என்ற பெயரில் காமெடி நடிகர்கள்,ரவுடிகள் லோக்கல் அரசியல்வாதிகள் போன்ற சிலரை மட்டும் அருகே அத்திவரதர் அருகே வரை விடுவது என்ன மாதிரியான நிலை என தெரியவில்லை. முதல் ஒரு வாரம் அத்திவரதரை அனைவரும் செல்போனில் போட்டோ வீடியோ எடுத்தார்கள் இப்போது அது காவல்துறையால் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது பாரட்டபடவேண்டிய விசியம்.
10.கோவில் உள்ளே சில மருத்துவ மையங்கள் உள்ளன. ஆனால் கோவில் வெளியே வரிசை அருகே ஒன்று மட்டுமே உள்ளது. ஆம்புலன்ஸ் முதல் நாட்களில் ஒன்று மட்டுமே இருந்த்து. அதை அதிகபடுத்தலாம்.
அத்திவரதர் வைபவம் தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக மாறி விட்டது. இந்தியா முழுவதும் இருந்து மக்கள் அத்தி வரதரை தரிசிக்க காஞ்சிபுரம் நோக்கி வருகை தந்து கொண்டு இருக்கின்றனர். இன்று யாரும் வர வேண்டாம் என அறிவிப்பு வந்து இருக்கிறது. இது நல்ல அரசிற்கு அழகல்ல எத்தனை பேர் வந்தாலும் அனைவரையும் தரிசிக்க வைத்து அனுப்பி இந்த அத்திவரதர் வைபவ நிகழ்வை சீரும் சிறப்புமாக நடத்த வேண்டியது தமிழக அரசின் முக்கிய கடமை இனி உள்ள நாட்களிலாவது நல்லபடியாக ஏற்பாடுகள் செய்யபடும் என நம்புகிறே௱ம்
சமூக ஆர்வலர்
நாஞ்சில் கோகுல் பிஎஸ்வி
Leave your comments here...