தமிழ்நாடு கிருஷ்ணவகை இளைஞர் முன்னேற்ற சங்க 5ம்ஆண்டு விழா மாநாடு….!!

சமூக நலன்

தமிழ்நாடு கிருஷ்ணவகை இளைஞர் முன்னேற்ற சங்க 5ம்ஆண்டு விழா மாநாடு….!!

தமிழ்நாடு கிருஷ்ணவகை இளைஞர் முன்னேற்ற சங்க 5ம்ஆண்டு விழா மாநாடு….!!

தமிழ்நாடு கிருஷ்ணவகை இளைஞர் முன்னேற்ற சங்கத்தின் 5ம் ஆண்டுவிழாவும் கிருஷ்ணவகை சமுதாய மாநாடு வரும் 18-08-2019  ஞாயிற்றுகிழமை அன்று  நாகர்கோவில் அடுத்த கருப்புக்கோட்டு நடைபெறுகிறது. காலை 8.30 கருப்புகோடு சுடலைமாட சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கும் விழாவில் காலை 9 மணிக்கு மாரத்தான் போட்டியினை கிள்ளியயூர் உதவி வேளாண்மை அலுவலர் விஜய் ஆனந்த் தொடங்கி வைக்கிறார். கருப்புகோடு பிடாகை தலைவர் வி .மணிகண்டன், செயலாளர் வேணு, துணைச் செயலாளர்கள் பி.பிரதீஸ், எம்.ஹரிஹரன் ஆகியோர்கள்  முன்னிலையில் முதல் பரிசான

2000ம், எ.விவேக்கும், இரண்டாம் பரிசாக ரூ.1000 ஆறுமுகதரனும், 3ம் பரிசாக 500ஐ கே.பாலகிருஷ்ணன் அவர்களும் வழங்குகிறார்கள். வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை என்.இ.சுப்பிரமணிய பிரசாத் அவர்களும், பெண்களுக்கான வடம் இழுத்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசினை ஆர்.வினுவும், மூன்றாம் பரிசினை எம்.சுபாஷ் அவர்களும், நான்காம் பரிசினை நீலகண்டன் அவர்களும் மகளிருக்கான கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசினை தேசிய ஊடகவியலாளர் நலசங்க தலைவர் வி.ஸ்ரீனிவாசராமன் அவர்களும் இரண்டாம் பரிசினை டி.ஸ்ரீகண்டன் அவர்களும், நான்காம் பரிசினை பகவதிபிள்ளை அவர்களும், பஜனை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசினை சாயீரதன் அவர்களும், இரண்டாம் பரிசினை வெட்டிக்கோணம் வீர சிவாஜி நற்பணி மன்றமும், மூன்றாம் பரிசினை வெட்டிக்கோணம் பி.வி.சி பந்தல் நிர்வாகம் வழங்க உள்ளது.

மாலை 6மணிக்கு சமய வகுப்பு  மாணவிகளின் இறைவணக்கத்துடன் சமுதாய மாநாடு நடைபெற உள்ளன. சமுதாய மாணவிகளின் பரத நாட்டியத்துடன் தொடங்கும் இந்த மாநாட்டுக்கு கிருஷ்ணன் வகை இளைஞர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.இ.நீலகண்ட சுதன் அனைவரையும் வரவேற்று பேசுகிறார், பொருளாளர் ஆர். ஆனந்தகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சங்கத்தின் தலைவர் பத்மகுமார் தலைமை தாங்குகிறார் துணை தலைவர் என்.கே.பாபு ஆண்டறிக்கை வாசிக்கிறார். கருப்புக்கோடு பிடாகை தலைவர், செயலாளர், துணை செயலாளர்கள் ஆகியோர் வரவேற்புரையாற்றுகின்றனர். வெள்ளிமலை விவேகானந்தா ஆஸ்ரமத்தின் தலைவர் தவத்திரு சுவாமி சைதன்யானந்த மஹராஜ் ஆசியுரை வழங்குகிறார்.


தமிழ்நாடு கிருஷ்ணன் வகை சமுதாய பேரவையின் தலைவர் சோமசேகரன் பிள்ளை, சேவா அறக்கட்டளையின் தலைவர் எம்.பத்மநாப பிள்ளை, கிருஷ்ணன் வகை சமுதாய பெனிபட் பண்டின் தலைவர் வி.சொர்ணகாரன் பிள்ளை, ஸ்ரீகிருஷ்ண தொழில்நுட்ப கல்லூரியின் தாளாளர் மணிகண்டேஸ்வர குமாரன், மேலாண்மை இயக்குனர் கோலப்பாபிள்ளை, சமுதாய பேரவையின் துணை தலைவர் கே.வேலுப்பிள்ளை , வி.வி.பிரசாத்,  புள்ளிவிவர ஆய்வாளர் எம்.எஸ்.குமரேசன், கே. பாலகிருஷ்ணன், இந்து முன்னனி மாவட்ட தலைவர் மிசா.சி.சோமன், சமுதாய பேரவையின் பொதுச்செயலாளர் எஸ்.என்.ஹரீஸ், முன்னாள் எம்எல்ஏ.வேலாயுதம், குமரி மாவட்ட பூமி பாதுகாப்பு கழகத்தின் தலைவர் டாக்டர் பத்மதாஸ், சமுதாய பொருளாளர் அஜய்குமார், சேவா அறக்கட்டளையின் செயலாளர் தலைவர் மோகன் சந்திரகுமார், கல்வி அறக்கட்டளையின் செயலாளர் எ.பத்மகுமார் சேவா அறக்கட்டளையின் இயக்குனர் கோ.சி.ராமதாஸ், காஞ்சிரத்துக்கோணம் சாயீதரன் குமரி பதிப்பகத்தின் இயக்குனர் கவிஞர் கண்ணன் ஆகியோர்களும், சிறப்பு விருந்தினர்களான தொழில் அதிபர்கள் எம்.உதயகுமார், எம்.காளிப்பிள்ளை, எம் கோலாப்பிள்ளை, எஸ்.கே. மணிகண்டன், ஆர்.சாரங்கன், கொச்சுபிள்ளை, வி.எச.எஸ்.பிரதாப், ஆர்.கே.ராமசந்திரன், கொல்லாய் எஸ்.கே.தாஸ், கிருஷ்ணகுமார், கே.ஜே.அஜந்தன், கோபகுமார், குமரி.ப.ரமேஷ், ஜெகன் பாபு, உள்ளிட்ட சமுதாய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சமுதாய எழுச்சி உரையாற்றுகின்றனர்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணன் வகை இளைஞர் முன்னேற்ற சங்க டிரஸ்டின் நிர்வாகிகளான பத்மகுமார், பி.இ.நீலகண்ட சுதன், ஆனந்தகிருஷ்ணன், என்.கே.பாபு, அஜிஸ்குமார், ஏ.ராஜேஷ், டாக்டர் அஜித்குமார், கபீஷ்தங்கம், மதுசூதனன் ஜெகன்பாபு, பத்மராஜன், அபிலாஷ், டி.யு.முருகன் , என்.இ.பார்த்தசாரதி, வினோத்குமார்,  சீ.ஜோதிபாசு, குமாரமூர்த்தி, ராஜேஷ்கிருஷ்ணன், ஆகியோர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.  முன்னதாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் கிருஷ்ணவகை சமுதாய ஊர்களில் நடைபெற்று வருகிறது.

நமது நிருபர்
சக்தி ஆதிரா

Leave your comments here...