இந்து சமய அறநிலையத்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பபப்படுமா…? அர்ஜூன் சம்பத் கோரிக்கை…!!
- August 12, 2019
- admin
- : 1083
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உட்பட்ட கோவில்களில் 75% பணியாளர்கள் கிடையாது. இதனால் கோவில் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் குறைவாக உள்ளனர். அப்படி அர்ச்சகர்கள் இருந்தாலும் அவர்கள் சரியான சம்பள நிர்ணயம் கிடையாது பல கோவில்களில் இரவு காவலாளிகள் இல்லாமல் இருப்பதால் சிலைகள் , நகைகள், உண்டியல் உள்ளிட்டவை சரியாக கண்காணிக்க முடியாமல் உள்ளது..
உதாரணத்திற்கு பழனி தண்டாயுதபாணி கோவிலில் ஆரம்பத்தில் 750 பணியாளர்கள் இருந்தனர் தற்போது 225 பணியாளர்களை உள்ளனர் . தமிழகத்தில் உள்ள பல்வேறு திருக்கோவில்களிலும் இதே நிலை தான் ஏற்படுகிறது.
இதுகுறித்து திருக்கோயில் பணியாளர்கள் கூறும்போது புதிய பணியாளர்கள் நியமிக்க மாட்டார்கள் பல முறை சங்கத்தின் சார்பில் மனுக்கள் கொடுத்த பிறகும் அறநிலைத்துறை ஆணையகம் கண்டுகொள்ளவே இல்லை ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது தொகுப்பூதியத்தில் அடிப்படையிலாவது பணியாளர்களை நியமிக்கலாம். அது கூட செய்வது கிடையாது இப்படி இருக்கும் போது எப்படி திருக்கோவில் பணிகளை செய்ய முடியும் …?
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில்களில் இரவு நேர காவலர்களை நியமிக்க பலமுறை அறநிலைதுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் ஆணையரகத்தில் அதிகாரிகளிடையே கோஷ்டிப் பூசல் உள்ளதால் ஆணையாளரிடம் கூடுதல் இயக்குனர்கள் சரிவர தகவல் கொடுக்காத காரணத்தால் பல கோப்புகள் கிடப்பில் கிடக்கிறது.
இதே நிலை தான் தமிழகத்தில் உள்ள எல்லாக் கோயில்களிலும் உள்ளது. ஆகவே பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு கோயில் பணியாற்ற புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
நமது நிருபர்
பாண்டியன்
Leave your comments here...