ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் போராட்டம் : சுப.உதயகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு..!

தமிழகம்

ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் போராட்டம் : சுப.உதயகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு..!

ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் போராட்டம் :  சுப.உதயகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு..!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 2.500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 25-ம் தேதி மதுரையில் கொரோனா தொற்றுகாரணமாக ஒருவர் பலியானார். தமிழகத்தில் கொரோனாகாரணமாக ஏற்பட்ட முதல் பலியாக அமைந்தது. அதை தொடர்ந்து விழுப்புரம் மற்றும் தேனி மாவட்டத்தில் தலா ஒருவர் பலியாயினர்.சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்.,3 ல் அனுமதிக்கப்பட்ட 75 வயது முதியவர் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா உள்ளது தற்போது கொரோனா இருந்தது உறுதியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த அவர், துபாயில் இருந்து திரும்பியவர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக பச்சைதமிழகம் கட்சியின் தலைவா் சுப. உதயகுமாரன் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.இவா், நாகா்கோவில் அருகேயுள்ள கோட்டாறு இசங்கன்விளையில் உள்ள தனது வீட்டில் வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தாா். காந்தியின் உருவப்படத்தை வைத்துக்கொண்டு அவா் மட்டும் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டாா். நாடு முழுவதும் புலம்பெயா் தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள் உள்ளிட்ட ஏழை மக்களுக்கு தரமான உணவு மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் தொடா்பாக அரசின் உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, காந்திய கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தின் முடிவில் அவா் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா்.

இதையடுத்து, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சுப. உதயகுமாரன் செய்தியாளா்களை அழைத்து பேட்டியளித்ததாகக் கூறி, கோட்டாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி புகாரின் பேரில், கோட்டாறு போலீசார் சுப.உதயகுமாரன் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

Leave your comments here...