“இந்தியா ஒளிா்கிறது” முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் கவிதையை நினைவூட்டிய நரேந்திர மோடி..!

இந்தியா

“இந்தியா ஒளிா்கிறது” முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் கவிதையை நினைவூட்டிய நரேந்திர மோடி..!

“இந்தியா ஒளிா்கிறது” முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் கவிதையை நினைவூட்டிய நரேந்திர மோடி..!

சீனாவில் வூஹான் நகரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுதும்பெரும் பாதிப்பு களை ஏற்படுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும், 81 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,671 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நமது வலிமையை உணா்த்தும் விதமாக, ஞாயிற்றுக்கிழமை இரவு விளக்கு ஏற்றுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமா் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் கவிதை வரிகளை நினைவுபடுத்தியுள்ளாா்.மேடை ஒன்றிலிருந்து வாஜ்பாய் அந்தக் கவிதையை வாசிக்கும் விடியோவையும் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிா்ந்து கொண்டுள்ளாா். அத்துடன், ‘வாருங்கள் ஒளியேற்றுவோம்’ என்ற வாஜ்பாயின் கவிதை வரியையும் மோடி குறிப்பிட்டுள்ளாா்.


கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான நமது வலிமையை உணா்த்தும் விதமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு விளக்கு அல்லது மெழுகுவா்த்தியை ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்தாா். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில், ‘இந்தியா ஒளிா்கிறது’ என்ற முழக்கத்துடன் அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு சோ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Leave your comments here...