கொரோனா வைரஸ் எதிரொலி : சபரிமலைக்கு வருவதைத் தவிருங்கள்: தேவசம் போர்டு பக்தர்களுக்கு வேண்டுகோள்.!

சமூக நலன்

கொரோனா வைரஸ் எதிரொலி : சபரிமலைக்கு வருவதைத் தவிருங்கள்: தேவசம் போர்டு பக்தர்களுக்கு வேண்டுகோள்.!

கொரோனா வைரஸ் எதிரொலி : சபரிமலைக்கு வருவதைத் தவிருங்கள்: தேவசம் போர்டு பக்தர்களுக்கு வேண்டுகோள்.!

கேரளாவில் நேற்று முதல் நாள் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. பத்தினம் திட்டாவில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. 5 பேரில் 3 பேர் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் உறவினர்கள் 2 பேருக்கு வைரஸ் தாக்கியது. ஏற்கனவே கேரளாவில் மூன்று பேருக்கு வைரஸ் தாக்கி குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர்.

இந்த நிலையில் கேரளாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பத்தினம் திட்டாவில் 2 பேருக்கும், கோட்டயத்தில் 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதன் மூலம் கேரளாவில்12 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எல்லோரும் தனியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்


அதன்படி, கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சபரிமலையில் மார்ச் 14-18 வரை நடைபெறும் மாத பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம் என தேவசம் போர்டு வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், சபரிமலை கோயிலில் மாத பூஜை வழக்கம்போல் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவும் அச்சம் உள்ளதால் மக்கள் ஒன்றாக அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்ட நிலையில், இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனிடையே, கொரோனா அச்சம் காரணமாக கேரளாவில் உள்ள திரையங்குகளை மார்ச் 31ஆம் தேதி வரை மூட அம்மாநில திரையுலக சங்கங்கள் முடிவு செய்துள்ளன. கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், அங்கும் பறவைக் காய்ச்சலின் தாக்கமும் ஆரம்பித்துள்ளது. இதனால், அம்மாநிலம் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Leave your comments here...