திமுக எதிராக ஒன்று திரண்ட பிராமணர்கள் – குலுங்கிய நங்கநல்லூர்- அரண்டு போன அறிவாலயம்..!!

அரசியல்

திமுக எதிராக ஒன்று திரண்ட பிராமணர்கள் – குலுங்கிய நங்கநல்லூர்- அரண்டு போன அறிவாலயம்..!!

திமுக எதிராக ஒன்று திரண்ட பிராமணர்கள் – குலுங்கிய நங்கநல்லூர்- அரண்டு போன அறிவாலயம்..!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சமீபத்தில் பத்திகையாளர்கள், பிராமணர்கள் குறித்து பேசிய இழிவான பேச்சு இணையத்தில் வைரலாகி வந்தது. இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகையாளார் சங்கங்கள் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் பிராமணர் சமூகத்தை அநாகரீகமாக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதை கண்டித்தும், திக திமுக அதன் ஆதரவு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் இந்து பிராமண கலாசச்ர துவேஷ பிரச்சாரங்களை கண்டிக்கும் வகையிலும் மிகப்பெரிய கண்டனப் பொதுக்கூட்டம் சென்னை நங்கநல்லூரில் நேற்று மாலை நடைபெற்றது.பிராமணர்களை எதிர்க்கும் ஊடகங்களை வன்மையாக கண்டிப்பதாக இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேலூர் இப்ராஹிம் பேசிய போது


இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் உலக பிராமணர்கள் சங்கத்தின் அமைப்பு செயலாளர் பிரகாஷ் ராவ் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் போடப்பட்டன. இந்துக்களுக்கும், இந்துக்களின் அங்கமாக விளங்கும் பிராமணர்களுக்கும் எதிராக பேசுபவர்களை கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் சென்னை சுற்று வட்டாரத்தில் இருந்து பிராமணர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில் நடிகர் எஸ்வி.சேகர் ,பாஜக நாராயணன் திருப்பதி, வளசை ஜெயராமன், வேலூர் இப்ராஹிம், இராமரவிகுமார், பாத்திமா அலி உட்பட பலர் கலந்து கொண்டு திமுக கண்டித்து தங்கள் கருத்துகளை கூறினார்.

Leave your comments here...