40 நாட்களில் தீர்வு காணப்படும் – மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார்

தமிழகம்

40 நாட்களில் தீர்வு காணப்படும் – மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார்

40 நாட்களில் தீர்வு காணப்படும் –  மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார்

தகவல் மற்றும் சட்ட முன்னணி சார்பில், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, நேற்று சென்னையில் நடந்தது. தகவல் மற்றும் சட்ட முன்னணி நிறுவனர் ரவி தலைமை வகித்தார். காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார், மாநில தலைவர் ஜான் கிறிஸ்டோபர், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணை தலைவர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் பேசியதாவது: தகவல் அறியும் உரிமை சட்டம், பாமர மக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டம்.பொது மக்கள், தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்கள் என, பல்வேறு நிலைகளை நாடுகின்றனர். பல ஆண்டுகளாக வழக்குகள் நடக்கின்றன.ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாடினால், மாநில தகவல் ஆணையர் முன், மனுதாரரே நேரில் ஆஜராகி, பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு ஏற்படும் வாய்ப்பு கிடைக்கிறது.தகவல் உரிமை சட்டத்தில், கிராமப்புறங்களை சார்ந்தவர்களே, அதிகம் தீர்வு காண்கின்றனர்.சென்னை போன்ற நகரங்களில், எவ்வளவோ பிரச்னைகள் இருந்தும், நகரம் மற்றும் மாநகராட்சி பகுதியில், இதற்காக மக்கள் நாடுவதில்லை. மாறாக, குறுக்கு வழியில் பணம் கொடுத்து, எதையும் சாதிக்கலாம் என்றே எண்ணுகின்றனர்.

தமிழகத்தில், 30க்கும் மேற்பட்ட அரசு துறைகள் உள்ளன. அனைத்து துறைகளிலும், பொது மக்கள் விண்ணப்பித்த, 30 நாட்களில், அவர்களுக்கு பதில் தர வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தில், 29 பிரிவுகள் உள்ளன.இதில், ஐந்து பிரிவுகளை, நாம் தெளிவாக தெரிந்து கொண்டால், தலைமை அதிகாரிகள் முதல், அமைச்சர்கள் வரை, நாம் யாரிடமும் போய் நிற்க வேண்டியதில்லை.ஒருவர், தகவல் உரிமை சட்டத்தில் மனு செய்து, 30 நாட்களில் சரியான பதில் இல்லை எனில், அடுத்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி செய்தால், அந்த மனுவை, தகவல் ஆணையரே விசாரிப்பார். பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

Leave your comments here...