ஓட்டு வங்கிக்காக நாட்டின் நலனுக்கு எதிரான துரோகத்தை செய்கிறது திமுக – சென்னை பேரணியில் இல.கணேசன் பேச்சு..!!

அரசியல்

ஓட்டு வங்கிக்காக நாட்டின் நலனுக்கு எதிரான துரோகத்தை செய்கிறது திமுக – சென்னை பேரணியில் இல.கணேசன் பேச்சு..!!

ஓட்டு வங்கிக்காக நாட்டின் நலனுக்கு எதிரான துரோகத்தை செய்கிறது திமுக – சென்னை பேரணியில் இல.கணேசன் பேச்சு..!!

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், அதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தை, தவறாக வழிநடத்தும் பயங்கரவாத இயக்கங்கள், அரசியல் சூழ்ச்சியாளர்களை கண்டித்தும், தமிழக பா.ஜ., சார்பில், மாவட்ட தலைநகரங்களில், நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.சென்னையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தலைமை தாங்கினார். நடிகர் ராதாரவி, பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், சென்னை கோட்ட பொறுப்பாளர் எம்.சக்கரவர்த்தி, இணை பொறுப்பாளர் ஜெய் சங்கர் பாத்திமா அலி , மற்றும் மாவட்டத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

பின்னர் கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் :- குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டது. ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துவிட்டார். இனி எந்த கொம்பனாலும் அதை மாற்ற முடியாது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை வாக்காளர்களாக மாற்றி விட்டனர். இவ்வாறு லட்சக்கணக்கான வாக்காளர்களை உருவாக்கிய நேரத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் அவர்களை வெளியேற்றினால் தன்னுடைய முதல்-அமைச்சர் கனவு நிறைவேறாது என்று மு.க.ஸ்டாலின் கருதுகிறார். கள்ளத்தனமான ஓட்டுக்காக சொந்த நாட்டை துண்டாட நினைக்கிறார். ஓட்டு வங்கிக்காக நாட்டின் நலனுக்கு எதிரான துரோகத்தை தி.மு.க. செய்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கும், தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் காங்கிரசும், தி.மு.க.வும் பொய்யை திரும்ப, திரும்ப பரப்புகிறார்கள். முஸ்லிம்கள் தெளிவானவர்கள். தேச பக்தர்கள். பாகிஸ்தான் பிரிந்தபோது, நாங்கள் இந்தியாவில்தான் இருப்போம் என்று இருக்கிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி எந்தநிலையிலும் பின் வாங்க மாட்டார். விரைவில் கணக்கெடுப்பு பணி தொடங்கும். எனவே தி.மு.க.வை நம்பி முஸ்லிம்கள் ஏமாற வேண்டாம் என கூறினார்.


இதில் பேசிய நடிகர் ராதாரவி:- இந்தியாவை காப்பாற்ற, நாம் இங்கு நிற்க வேண்டியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்தியாவில் உள்ள, 130 கோடி பேருக்கும் பிரச்னை இல்லை. அவர்கள், இங்கு உள்ளவர்களுக்காக போராடவில்லை; வெளியில் இருந்து வந்த வர்களுக்காக போராடுகின்றனர்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, போராட்டம் நடத்துவதை, மக்கள் விரும்பவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை, வெளியில் அனுப்பி தான் தீர வேண்டும். சட்டசபை விவாதத்தில், ‘தமிழகத்தில், முஸ்லிம் யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா’ என, முதல்வர் கேட்டால், பதில் அளிக்காமல், எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்கின்றனர் என்றார்

Leave your comments here...