புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1,650 கூடுதல் இடங்கள் பெறப்பட்டுள்ளது – மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

தமிழகம்

புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1,650 கூடுதல் இடங்கள் பெறப்பட்டுள்ளது – மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1,650 கூடுதல் இடங்கள் பெறப்பட்டுள்ளது – மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 இடங்களில் அமைய இருக்கும் மருத்துவ கல்லூரிகளுக்கான பூர்வாங்க பணிகளுக்கு தலா ரூ.100 கோடியும், அதற்கான நிலத்தையும் தமிழக அரசு ஒதுக்கியது. மேலும், அந்தக்கல்லூரிகளுக்கு முதல்வர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன், துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.


பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- தமிழக மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் உள்ளன. புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் மருத்துவ படிப்புகளுக்கு கூடுதலாக 1,650 இடங்கள் பெறப்பட்டுள்ளன. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு அரணாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முன்பு அறிவித்த திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு உள்ளன.

இதேபோன்று ஏழை, எளிய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. மீனவர்கள் வாழ்வாதாரத்தை காக்க, கச்சத்தீவை மீட்க சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம் என கூறினார்.

Leave your comments here...