கோவை மாவட்டத்தின் அமைதியை கெடுக்கும் போராட்டங்களை தடைசெய்யவேண்டும்- அர்ஜூன் சம்பத் கோரிக்கை..!!

தமிழகம்

கோவை மாவட்டத்தின் அமைதியை கெடுக்கும் போராட்டங்களை தடைசெய்யவேண்டும்- அர்ஜூன் சம்பத் கோரிக்கை..!!

கோவை மாவட்டத்தின் அமைதியை கெடுக்கும் போராட்டங்களை தடைசெய்யவேண்டும்- அர்ஜூன் சம்பத் கோரிக்கை..!!

கோவை மாவட்டத்தின் அமைதியை கெடுக்கும் வகையில் இஸ்லாமிய வகுப்பு வாத அமைப்புக்கள் நடத்தும் காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட CAA–விற்கு எதிரான அனைத்து விதமான போராட்டங்களையும் தடை செய்யக்கோரி கோரிக்கை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைவர் முதல்வர் ,மாவட்ட ஆட்சியர், கோவை மாநகர ஆணையர் ஆகியோருக்கு புகார் கூறியுள்ளார்.

அவர் அளித்து உள்ள அந்த புகாரில்:- கோவை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகள் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் பெயர் பெற்றது. கடந்த 1998ஆம் வருடம் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புக்களால் நடத்தபட்ட தொடர் குண்டு வெடிப்பின் சம்பவங்களுக்கு பிறகு அமைதியும் மத நல்லிணக்கமும் சீர்குலைந்து பொருளாதார வளர்ச்சி, தொழில் சூழல் இயல்பு வாழ்கை உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதிலிருந்து மீண்டு வருவதற்கு சுமார் பத்தாண்டுகள் ஆகியது.

தற்பொழுது சிஏஏ.எதிர்ப்பு போராட்டம் என்கிற பெயரில் கோவையில் ஆத்துப்பாலம் பகுதியில் கோவையின் சாஹீன் பாக் எனும் பெயரில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மதுக்கரை பொள்ளாச்சி உள்ளிட்ட சில பகுதிகளிலும் இத்தகைய தொடர் போராட்டங்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகளால் நடத்தப்படுகிறது. குறிப்பாக ஆத்துப்பாலம் பகுதியில் நடத்தப்படும் போராட்டங்களில் தினசரி ஆயிரக்கணக்கில் இஸ்லாமிய மக்கள் கூடுவதும் அதில் பெண்கள் குழந்தைகள் ஆகியோரை முன்னிறுத்தி போராட்டம் நடத்துவதும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முற்றுகை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முற்றுகை என்று தொடர் போராட்டங்களை நடத்துவதும் கோவையில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகளாகவே தெரிகின்றது.



மேலும் போராட்டம் நடத்தும் வேளையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகிறார்கள். போராட்டக்காரர்களின் பந்தலில் போராட்டம் என்கிற பெயரில் விடுதலை சிறுத்தை, நாம் தமிழர், திமுக, திராவிடர் கழகம், உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் வந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகின்றார்கள். இந்திய பிரதமரையும், தமிழக முதல்வரையும், இந்து தமிழர் சமய நம்பிக்கைகளையும் இழித்தும், பழித்தும் பேசி வருகின்றனர். இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியை தூண்டி வருகிறார்கள். பிராமணர்களையும் இந்து சமயத்தையும் இந்திய நாட்டையும் அவமதிக்கும் வகையில் பேசி வருகிறார்கள். மொத்தத்தில் இஸ்லாமியப் பெண்களையும், குழந்தைகளையும், இளைஞர்களையும் மூளைச்சலவை செய்து வருகிறார்கள். இது கோவை ஆத்துப்பாலம் பகுதியில் அன்றாட நடவடிக்கைகளாக மாறிவருகிறது.

கோவை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மிகவும் பக்குவமாகவும் திறமையாகவும் இதுவரை சமாளித்து வருகின்றார்கள். ஆனால் பொதுமக்கள் மிகக் கடுமையாக பாதித்து வருகின்றார்கள். ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு உரிமையுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதும், போக்குவரத்துக்கு இடையூறு செய்வதும், அரசு பணியாளர்களை தங்கள் கடமையை செய்ய விடாமல் தடுப்பது, தேசவிரோத முழக்கங்களை எழுப்புவதும் எந்த வகையில் நியாயமானது? ஆரம்ப கட்டத்திலேயே இத்தகைய முயற்சிகளை முறியடிக்க வேண்டும். இதற்காக மாவட்ட நிர்வாகத்துடன் முழுமையாக கோவை மாநகர மக்கள் ஒத்துழைப்பை இந்து மக்கள் கட்சி கொடுக்க தயாராக உள்ளது.

கோவையில் உள்ள பொது அமைப்புக்கள் அனைவரும் இணைந்து கோவையில் அமைதி வேண்டி கோவையில் நடைபெறுகின்ற போராட்டத்தை உடனடியாக கைவிட்டு அவர்களுடைய சிஏஏ எதிர்ப்பு உணர்வுகளை அவர்கள் நீதிமன்றம் மூலமாகவோ தேர்தல் முறை மூலமாகவோ அல்லது அவர்களை ஆதரிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவோ இது விஷயத்திற்கு அவர்கள் தீர்வு கண்டு கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக மத நல்லிணக்கத்தையும் கோவை அமைதியையும் சீர்குலைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அமைதி நல்லிணக்கத்தை விரும்புகின்ற இஸ்லாமிய அமைப்புகளும் எங்களோடு இணைந்துள்ளார்கள்.

இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலங்கள் இன்றைக்கு சிஏஏ எதிர்ப்பு பிரச்சார மேடைகள் ஆக மாறி வருகின்றன. மத வழிபாட்டு தலங்களை ஆன்மிக விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். அரசியல் மேடையாக மாற்ற முயற்சி எடுக்கக்கூடாது. இந்த முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் கோவையிலும் இந்த உண்ணாவிரதத்தை தடை செய்யக்கோரி வருகின்ற வெள்ளிக்கிழமை துவங்கி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கோவை மாநகர மக்கள் சார்பில் நடத்தப்படும் என்பதை இந்தக் கடிதம் மூலம் தெரிவித்துக்கொள்கின்றோம் என அந்த புகார் மனுவில் இந்து கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

Leave your comments here...