எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை

தமிழகம்

எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை

எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை

ஜனவரி 8ஆம் தேதி களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொலையில் ஈடுபட்டது தவுபீக், ஷமீம் என்ற இருவர் எனத் தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் தீவிர தேடுதலுக்கு பிறகு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில், அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்தனர். இதனிடையே அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் கேரள மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோர் தனித்தனியே பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 2014ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொல்லப்பட்ட வழக்கில் நவாஸ், தவுபீக் உள்ளிட் 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் திருச்செந்தூர் அருகேயுள்ள காயல்பட்டினத்திற்கு தவுபீக்கை தனி வேனில் அழைத்துச்சென்ற தனிப்படை போலீஸார், நவாஸின் 2வது மனைவி பாத்திமாக வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகியோர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரு வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற அனுமதி கேட்டு தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதிக்கும், கோர்ட்டுக்கும் மனு அளித்தனர்.இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி மற்றும் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. கொலை வழக்கு தொடர்பாக குமரி மாவட்ட போலீசார் சேகரித்து வைத்திருந்த ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில்,இன்று அதிகாலை முதல் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான ஷமீம், தவுபிக் இருவரும் பாத்திமா வீட்டில் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.


Leave your comments here...