அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிகழ்ச்சி நிரலை மத்திய வெளியுவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது..!!

உலகம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிகழ்ச்சி நிரலை மத்திய வெளியுவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது..!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிகழ்ச்சி நிரலை மத்திய வெளியுவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாக இன்று இந்தியா வருகிறார். இதற்காக குஜராத் மற்றும் ஆக்ராவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 2 நாள் சுற்றுப்பயணமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர், இந்தியா வர உள்ளனர். அதிபராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக, அவர் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அகமதாபாத் விமான நிலையத்திற்கு வரும் ட்ரம்பை பிரதமர் மோடி, வரவேற்க உள்ளார். 

பின்னர் அங்கிருந்து சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு அவர்கள் செல்ல உள்ளனர். அவர் செல்லும் பாதையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கும் ட்ரம்ப், அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்கூட்டியே குஜராத் சென்றுள்ளார். 

அடுத்த நாள் ஆக்ரா செல்லும் அதிபர் ட்ரம்ப், தமது மனைவியுடன் தாஜ்மகாலை பார்வையிடுகிறார். இதற்காக ஆக்ரா நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நமஸ்தே ட்ரம்ப் என்ற வாசகத்துடன் வழிநெடுகிலும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் வருகையை முன்னிட்டு 5,000 போலீசார், 10 கம்பெனி துணை ராணுவத்தினர் மற்றும் துப்பாக்கிச்சுடும் வீரர்கள், என பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.



இன்று இந்தியா வரவிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்ன நிகழச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் என்ற நிகழ்ச்சி நிரலை மத்திய வெளியுவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அதிபர் ட்ரம்ப் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். 
காலை 11.40 மணி: 
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமாநிலையம் வந்தடைகிறார் அதிபர் ட்ரம்ப். 
மதியம் 12.15 மணி:
சபர்மதி ஆசிரமத்திற்கு செல்லும் அவர்கள், காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
மதியம் 1.05 மணி:
பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டுள்ள மோட்டேரா கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து, நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 
பிற்பகல் 3.30 மணி: 
அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் ஆக்ராவுக்கு புறப்பட்டு செல்கிறார். 
மாலை 5.15 மணி:
தாஜ்மகாலை தனது குடும்பத்தினருடன் அதிபர் ட்ரம்ப் பார்வையிடுகிறார். 
மாலை 6.45 மணி:
ஆக்ராவில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்தடைகிறார் அதிபர் ட்ரம்ப்.
நாளை 
காலை 10 மணி:
குடியரசுத்தலைவர் மாளிகைக்கு செல்லும் அதிபர் ட்ரம்புக்கு, பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பும், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட உள்ளது.
காலை 10.30 மணி:
டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். 
காலை 11 மணி:
ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். 
மதியம் 12.40 மணி:
இருநாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு 7.30 மணி:
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விருந்தளிக்கிறார். 
இரவு 10.00 மணி:
பின்னர் டெல்லியிலிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார். 

Leave your comments here...