இந்தியாவை சீண்டிய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது பதவி விலகல்

உலகம்

இந்தியாவை சீண்டிய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது பதவி விலகல்

இந்தியாவை சீண்டிய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது பதவி விலகல்

மலேசியாவில் 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற மகாதீர் முகமதின் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி, மக்கள் நீதி கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.

இந்தியாவில் காஷ்மீர் விவகாரம், சிஏஏ, உள்ளிட்டவற்றில் மகாதீர் மூக்கை நுழைத்தார். அவரது கருத்துகள் பெரும் கண்டனங்களுக்கு உள்ளாகின. இதனால் கூட்டணிக் கட்சிகளுக்குள், பிரச்னைகள் ஏற்பட்டன. மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது.இதனால்,மகாதீரை அன்வர் விமர்சித்தார். அதில் கோபமடைந்த மகாதீர், கடுமையான வார்த்தைகளில் அன்வரை விமர்சித்தார். உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெருமையுடன் 94 வயதான முகமது கடந்த 2ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்த நிலையில், தற்போது கூட்டணி கட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.



மேலும் ஆட்சிக்கு வந்து சில வருடங்களில் பொறுப்பை தன்னிடம் வழங்குவதாக கூறிய முகமது, சத்தியத்தை மீறி ஏமாற்றி விட்டதாக குற்றஞ்சாட்டி மக்கள் நீதி கட்சி தலைவர் அன்வர் நேற்று பேட்டியளித்தார். இதையடுத்து தங்கள் ஆதரவாளர்களுடன் இரு தலைவர்களும் தனித்தனியே ஆலோசனை நடத்திய நிலையில் பதவி விலகும் முடிவை பிரதமர் மகாதீர் முகமது எடுத்துள்ளார். மகாதீர் ராஜினாமா கடித‌த்தை அந்நாட்டு மன்னரிடம் அளித்து உள்ளார்.

Leave your comments here...