அன்று ரஜினி எதிர்ப்பு ! இன்று ரஜினி ஆதரவு ! பெரியார் பேரணி குறித்து ரஜினி கூறியது உண்மை – சுப்பிரமணிய சாமி

அரசியல்

அன்று ரஜினி எதிர்ப்பு ! இன்று ரஜினி ஆதரவு ! பெரியார் பேரணி குறித்து ரஜினி கூறியது உண்மை – சுப்பிரமணிய சாமி

அன்று ரஜினி எதிர்ப்பு ! இன்று ரஜினி ஆதரவு ! பெரியார் பேரணி குறித்து ரஜினி கூறியது உண்மை – சுப்பிரமணிய சாமி

துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழா ஜனவரி 14ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, 1971ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

“1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.

இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். ‘பிளாக்’கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் மிகப் பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே நம்முடைய ‘பப்ளிசிடி மேனேஜர்’ என சோ அட்டையிலேயே வெளியிட்டார்” என்று குறிப்பிட்டார்

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தை திருமாவளவன், திராவட கழக தலைவர் கீ.வீரமணி, திராவட இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும் இந்த பேச்சுக்கு ரஜினி காந்த் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கூறி இருந்தனர்.

இந்நிலையில் இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்:-  1971 ஆம் ஆண்டில்  சேலத்தில் நடந்த பேரணி குறித்து நான் பேசிய பேச்சு சர்ச்சையாக உள்ளது. இல்லாத ஒன்றை கற்பனையான விஷயத்தை நான் கூறவில்லை.  கேள்விப்பட்டது மற்றும்  அவுட்லுக் பத்திரிகையில்  வந்ததைத்தான் கூறினேன். இதற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்கள். மன்னிக்கவும், நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்  என தெரிவித்தார்.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர் டுவிட்டரில் கூறியதாவது:- ஒரு மாற்றத்துக்காக நான் இம்முறை நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஆதரவு தரத் தயார்.
1971-ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் பேரணியில் ராமர் மற்றும் சீதையை கேவலமாக சித்தரித்து அணிவகுத்துச் சென்றது உண்மை, இதனை சோ  துக்ளக் இதழில் பதிவிட்டுள்ளார். எனவே, நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தில் உறுதியாக இருந்தால், தேவைப்பட்டால் ஒரு மாற்றத்திற்காக இம்முறை அவருக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave your comments here...