அயோத்தியில் வானத்தை தொடும் ராமர் கோவில் கட்டுமானப்பணி 3மாதங்களுக்குள் தொடங்கும்- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

இந்தியா

அயோத்தியில் வானத்தை தொடும் ராமர் கோவில் கட்டுமானப்பணி 3மாதங்களுக்குள் தொடங்கும்- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

அயோத்தியில் வானத்தை தொடும் ராமர் கோவில் கட்டுமானப்பணி  3மாதங்களுக்குள் தொடங்கும்- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் லக்னோவில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

 

அப்போது பேசிய அவர்:- குடியுரிமை  திருத்த சட்டம் ஒருபோதும் திரும்ப பெறப்படாது என்று தெரிவித்தார். குடியுரிமை திருத்த  சட்டம் குறித்து ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி,  அகிலேஷ் யாதவ் பொதுவெளியில் விவாதிக்க தயாரா?  போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை  திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது. வாக்கு வங்கி அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. நேரு செய்ய முடியாததை மோடி செய்துள்ளார். முத்தலாக் மசோதாவையும் எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இந்த சட்டத்திற்கு எதிராக யார் வேண்டுமானாலும் போராடலாம். நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்றார்.

மேலும் பிரிவினையின் போது, இந்து, சீக்கிய, புத்த மதத்தினர் மற்றும் சமணர்கள் வங்காள தேசத்தில் 30 சதவீத  மக்களும், பாகிஸ்தானில் 23 சதவீத  மக்களும் இருந்தனர். ஆனால் இன்று, இது முறையே 7 சதவீதம் மற்றும்  3 சதவீதம் தான். இந்த மக்கள் எங்கே போயிருக்கிறார்கள்? குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களிடம் இதை நான்  கேட்க விரும்புகிறேன்.

ராமர்கோயில் கட்டுவதை காங்கிரஸ் ஆட்சி தாமதப்படுத்தி வந்தது. தற்போது, பிரதமர் மோடி தலைமையில், அயோத்தியில் வானத்தைத் தொடும் ராமர் கோவில் கட்டுமானப்பணி   மூன்று மாதங்களுக்குள் தொடங்கும் என கூறினார்.

Leave your comments here...