2047-ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த 100-ஆவது சுதந்திர தினத்தைப் போற்றும் முக்கியமானவர்களுடன் நான் உரையாற்றுகிறேன்: மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு.

இந்தியாசமூக நலன்

2047-ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த 100-ஆவது சுதந்திர தினத்தைப் போற்றும் முக்கியமானவர்களுடன் நான் உரையாற்றுகிறேன்: மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு.

2047-ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த 100-ஆவது சுதந்திர தினத்தைப் போற்றும் முக்கியமானவர்களுடன் நான் உரையாற்றுகிறேன்: மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு.

பிரதமர் மோடி, 2018-ம் ஆண்டு ’எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்தில் பள்ளி மாணவர்கள் எப்படி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று விளக்கியிருந்தார். இந்தநிலையில், பள்ளி இறுதித்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை 11 மணிக்கு உரையாடினர்.

டெல்லியிலுள்ள டால்காட்டோரா என்ற என்ற அரங்கத்தில் பரிக்ஷா பி சார்சா 2020 என்ற பெயரில் நடைபெறும் இந்த கருத்தரங்கத்தில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து 2000 பள்ளி மாணவர்கள் வரை கலந்துகொள்வார்கள். இந்த 2000 மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதிகபட்சமாக 1,500 எழுத்துகளுக்கு மிகாமல் அந்த கட்டுரை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், 9-12 வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த கருத்தரங்கு பொங்கல் பண்டிகையின் காரணமாக 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடி இந்த பரிக்ஷா பி சார்சா என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டுவருகிறார்.

இதில் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசிய பிரதமர் மோடி:- ஒரு பிரதமராக, பல நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு புதிய அனுபவத்தினை எனக்கு வழங்கியது.ஆனால், உங்கள் மனதை தொட்ட நிகழ்ச்சி எது என்று யாரேனும் என்னிடம் கேட்டால், இந்த நிகழ்ச்சியே என்று நான் கூறுவேன்.

2047-ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த 100-ஆவது சுதந்திர தினத்தைப் போற்றும் முக்கியமானவர்களுடன் நான் இன்று உரையாற்றுகிறேன். நமது நாட்டின் எதிர்காலம் வளம்பெற இந்த தலைமுறை தங்களை சரியாக தயார்படுத்திக்கொண்டு செயலாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. உலகச் சூழல் இன்று மிகவும் மாற்றமடைந்துள்ளது, வாய்ப்புகள் பெருகியுள்ளன. மதிப்பெண்கள் மட்டுமே எதிர்காலம் என்ற நிலை மாறியுள்ளது. இவற்றை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். எனவே வாழ்வில் தேர்வு தான் முக்கியம் என பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் வற்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

2022-ஆம் ஆண்டு நமது 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அப்போது நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை நாம் பயன்படுத்தும் நிலை வர வேண்டும். நமது நாட்டுத் தயாரிப்புகளை சந்தைப்படுத்த வேண்டும். இதனால் நாடு வலுப்பெற்று நமது பொருளாதாரம் உயரும். இதனை சாத்தியப்படுத்த நாம் அனைவரும் உறுதிகொள்வோம்.

சந்திரயான்-2க்கு பிறகு, எதுவும் எளிதல்ல என்பதை புரிந்து கொண்டேன். விஞ்ஞானிகளிடம் பேசினேன்; அவர்களை ஊக்கப்படுத்தினேன். வெற்றியின் முதல் படி தோல்வியே. அதிலிருந்து கற்கும் பாடத்தில் தான் வெற்றி இருக்கிறது. 2002ம் ஆண்டு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் கும்ளே காயமடைந்தார். அனைவரும் அவர் விளையாட மாட்டார் என கவலையடைந்தனர். ஆனால், காயத்தையும் பொருட்படுத்தாமல், களத்தில் இறங்கி பந்துவீசினார். அவர் ஊக்கத்துடன் விளையாடியதால், ஒட்டுமொத்த சூழ்நிலையையும் மாறியது.

ஒவ்வொருவரும் புதிதாய் ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும். பாடத்திட்டத்தை போல மற்ற துறைகளுக்குக்கும் மாணவர்கள் சம அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதன்மூலம் ரோபோட்டிக்ஸ் போன்ற புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய முடியும். சில பெற்றோர் இதனை டிரண்டாக கருதுகின்றனர். நமது வாழ்க்கை தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. கடின உழைப்பே வெற்றிக்கான வழி என மாணவர்கள் மத்தியில் மோடி உரையாற்றினார்.!

Leave your comments here...