பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கலால் வரியை குறைக்க மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்..!

சமூக நலன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கலால் வரியை குறைக்க மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கலால் வரியை குறைக்க மத்திய அரசுக்கு  டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்..!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தினால் கலால் வரி  குறைக்க வலியுறுத்தி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.78.39-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.72.28-க்கும் விற்கப்படுகின்றன. கடந்த 12 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை ஒரு நாள் கூட குறையாமல், தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் மீண்டும் போர் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக, வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறையும் என்ற அச்சம் காரணமாகவே, பன்னாட்டு சந்தையில் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்து வருகின்றன.

இதேநிலை நீடித்தால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் மட்டுமின்றி, பொதுமக்களும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்வது நன்மை பயக்காது.எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

Leave your comments here...