தஞ்சை பெரிய கோவிலில் காதல் ஜோடிகளின் அட்டகாசங்கள்.! நடவடிக்கை எடுப்பது யார்….?

சமூக நலன்

தஞ்சை பெரிய கோவிலில் காதல் ஜோடிகளின் அட்டகாசங்கள்.! நடவடிக்கை எடுப்பது யார்….?

தஞ்சை பெரிய கோவிலில் காதல் ஜோடிகளின் அட்டகாசங்கள்.! நடவடிக்கை எடுப்பது யார்….?

தஞ்சை பெரிய கோயில் என அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில் இன்றளவும் எப்படி கட்டப்பட்டது என்ற தெளிவான பார்வை கிடைக்கவில்லை.

தற்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேபோல் பக்தர்கள் பயணிகள் அனைவரும் இந்த கோவிலுக்கு வருகிறார்கள் என்றால் மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாகத்தான் அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் இந்த கோவிலில் பெரியநாயகி, பெருவுடையார், விநாயகர், வராகி அம்மன், முருகர், தட்சணாமூர்த்தி, கருவூரார், நடராஜர், ஆகியோர்களின் சன்னதிகள் இங்கே இருக்கின்றன.

இந்நிலையில், கோவிலின் உள் சுற்று பிரகார தூண்கள் மறைவிடத்தில்  தஞ்சம் அடையும் ஜோடிகள் சிலர், மிக நெருக்கமாக அமர்ந்து காதல் சேட்டைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. காதல் ஜோடிகள், ஆபாச செயல்களில் ஈடுபடுவதால், பெரும் சிரமம் ஏற்படுவதாக , பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் தங்களது குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்துவிட்டு திருச்சுற்று மண்டபங்களில்  லிங்கங்களை தரிசனம் செய்வதற்காக சுற்றி வருகிறார்கள். அவ்வாறு மண்டபத்தை சுற்றி வரும்போது காதல் ஜோடிகள் சிலர் எல்லை மீறல் ஈடுபடுகிறார்கள், அப்பொழுது அவர்கள் செய்யும் இச்செயல் பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது. ஆபாச செயல்களில் ஈடுபடுவோரை அறநிலையத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் கண்டுகொள்வதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். இந்த கும்பல்களை தடுத்து நிறுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் பக்தர்கள்.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் முகநூல் பக்கத்தில்:-

தஞ்சை பெரிய கோயிலில் இன்றைய அவல நிலை முகம் சுழிக்கும் பக்தர்கள் கண்டுகொள்ளாத ஆலய நிர்வாகம் காமக் கொடூரர்களின் போக்கிடமாக மாறும் பெருவுடையார் ஆலயம். பெருந்தன்மையோடு இருக்கும் காவல் துறை நடவடிக்கை வேண்டி போராட அனைவரும் திங்கள் காலை 11மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாரீர் எனவும், இந்து மக்கள் கட்சி -குடந்தை டி. குருமூர்த்தி மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் அவர்களை  9894776577. என்னில் தொடர்பு கொள்ளவும் என குறிப்பிட்டு உள்ளது.!

Leave your comments here...