இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவது தான் அடுத்த இலக்கு : மத்திய அமைச்சர் ஜிந்தேந்திர சிங்

இந்தியா

மியான்மரில் இருந்து இந்தியாவில் குடியேறிய ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று பிரதமர் அலுவலக விவகாரத்துறை அமைச்சர் ஜிந்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநில அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் கூறியதாவது:-

பார்லிமென்டில் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட மறுநாள், காஷ்மீரிலும் அந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால், அடுத்த கட்ட நடவடிக்கை, இங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள ரோஹிங்கியர்களை வெளியேற்றுவது தான். மேற்கு வங்கத்திலிருந்து பல மாநிலங்களை தாண்டி, காஷ்மீரின் வடக்கு பகுதியில் ரோஹிங்கியர்கள் எப்படி குடியேறினர் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். ஜம்முவில் குறிப்பிடத்தக்க அளவு ரோஹிங்கியர்கள் உள்ளனர்.

ரோஹிங்கியர்கள் வெளியேற்றுவது குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது. வெளியேற்றப்படுபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால், பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்படும். குடியுரிமை சட்டத்தில், ரோஹிங்கியர்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை. குடியுரிமை சட்டத்தின்படி, 6 சிறுபான்மையினர்களில் அவர்கள் இல்லை. அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்ட அண்டை நாடுகளை சேர்ந்தவர்களும் இல்லை. அவர்கள் மியான்மரில் இருந்து வந்தவர்கள். அவர்கள் அங்கு தான் செல்ல வேண்டும்.இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை,  சட்டவிரோதமாக காஷ்மீரில் குடியேறி உள்ள ரோஹிங்கியர்களை வெளியேற்றுவது தான் என கூறியுள்ளார்.!

Leave your comments here...