பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேச்சு ; நெல்லை கண்ணன் கைது..?

தமிழகம்

பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேச்சு ; நெல்லை கண்ணன் கைது..?

பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேச்சு ; நெல்லை கண்ணன் கைது..?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நெல்லை கண்ணனின் பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து நெல்லை கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.பா.ஜ.க சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது நெல்லை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக பாஜக அவரை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று மாலை, சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை முன், பாஜக நிர்வாகிகள் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் இல.கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன் உட்பட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி, கோஷமிட்டனர்.

இந்நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை கமிஷனர் சுதாகர் தலைமையில் போலீசார், 50 பெண்கள் உட்பட, 200 பேரை கைது செய்தனர். இதைப்போல், சிட்டி சென்டர் அருகே, மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களையும், போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும், மாலை விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கைது என தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய புகாரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

 

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் திருநகரில் தனியார் லாட்ஜில் நெல்லை கண்ணன் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து பெரம்பலூருக்கு விரைந்த நெல்லை போலீசார், அங்கிருந்து நெல்லை கண்ணனை அழைத்துக் கொண்டு திருநெல்வேலிக்கு புறப்பட்டனர்.

Leave your comments here...