கோவையில் பழைய, 1,000 ரூபாய் நோட்டுகள், போலி பண பண்டல்கள் பறிமுதல்: சிக்கிய திமுக பிரமுகர் ஆனந்தன்..!

தமிழகம்

கோவையில் பழைய, 1,000 ரூபாய் நோட்டுகள், போலி பண பண்டல்கள் பறிமுதல்: சிக்கிய திமுக பிரமுகர் ஆனந்தன்..!

கோவையில் பழைய, 1,000 ரூபாய் நோட்டுகள், போலி பண பண்டல்கள்  பறிமுதல்: சிக்கிய திமுக பிரமுகர் ஆனந்தன்..!

கோவை மாவட்டம், அன்னுார் ஒன்றிய, தி.மு.க., செயலராக இருப்பவர் ஆனந்தன். இவருக்கு சொந்தமான சொகுசு பங்களா, வடவள்ளி, ஜெயலட்சுமி நகரில் உள்ளது. இதில், 28ம் தேதி அதிரடி ரெய்டு நடத்திய வருமான வரித்துறையினர், மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய, 1,000 ரூபாய் நோட்டுகளையும், போலி பண பண்டல்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த இந்த பங்களாவை நீலாம்பூரை சேர்ந்த ரசீது என்பவர் வாடகைக்கு எடுத்து இருந்தார். இவரிடம் கரும்புக்கடையை சேர்ந்த ஷேக், பெரோஸ் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் தங்களிடம் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ. 500, 1000 நோட்டுகள் இருப்பதாகவும், புதிய நோட்டுகளை தந்தால் அதற்கு பதிலாக இரண்டு மடங்கு மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை தருவதாக அப்பகுதியில் உள்ள சிலரிடம் கூறி உள்ளனர்.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் ரஷீத் தங்கியிருந்த பங்களாவுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மத்திய புலனாய்வு பிரிவினர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. வேல்முருகன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கடந்த 28-ந் தேதி மாலை முதல் நள்ளிரவு வரை பங்களாவில் சோதனை நடத்தினர். அப்போது பங்களாவில் உள்ள ரகசிய அறையில் இருந்து கட்டுக்கட்டாக மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500, 1000 நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை சோதனை செய்தபோது அந்த நோட்டுகளில் மேல் பகுதியில் மட்டும் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டு கீழே உள்ள இதர தாள்கள் போலியாக பேப்பரில் இருந்து வெட்டப்பட்டு விளிம்புகள் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்டு ரூபாய் நோட்டுகள் போன்று கட்டு கட்டாக தெரியும்படி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அவற்றை கணக்கிட்ட போது 268 ஆயிரம் ரூபாய் கட்டுகள் இருந்தது. அதற்குக் கீழே 667 பேப்பர் கட்டுகள் ரூபாய் நோட்டுகள் போல அடுக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் அங்கு இருந்து பணம் என்னும் எந்திரங்கள், ரூபாய் கட்டுகளை பின் அடிக்கும் எந்திரங்கள், ஏர் பிஸ்டல், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில் அன்னூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் ஆனந்தன் தனக்கு சொந்தமான பங்களாவில் கரும்புக்கடை, வள்ளல் நகரை சேர்ந்த ஷேக்,பெரோஸ் மற்றும் நிலம்பூரை சேர்ந்த ரஷீத் ஆகியோர்களைக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இங்கு கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்ட போலி மற்றும் மதிப்பு இழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை காட்டி பொதுமக்கள் பலரிடமும் அவர்கள் கொடுக்கும் பணத்தை இரட்டிப்பாக அதிகரித்து தருவதாக கூறி மோசடி செய்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் குறைந்த வட்டியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி தருவதாக கூறி பரிசீலணை கட்டணமாக லட்சக்கணக்கில் பணம் பெற்று திருப்பி கொடுக்காமல் மோசடி செய்திருப்பதும், பழைய மதிப்பு இழப்பு செய்யப்பட்டரூபாய் நோட்டுகளை மாற்றிதர கமி‌ஷன் பெற்று மோசடி செய்து இருப்பதும் தெரிய வந்தது. சோதனையில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ 2½ லட்சம் ஆகும்

இது குறித்து வடவள்ளி போலீசார் தி.மு.க. பிரமுகர் ஆனந்தன், ரஷீத், ஷேக், பெரோஸ் ஆகியோர் மீது மோசடி, போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள 4 பேரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. திமு.க. பிரமுகர் ஆனந்தன் உள்பட 4 பேரால் ஏமாற்றப்பட்டவர்கள் பகிரங்கமாக போலீசில் புகார் தரலாம் என்று மாவட்ட போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. பிரமுகரான ஆனந்தன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவினாசி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். இவருக்கு சொந்தமான பங்களா, வீடு, கிளப் ஆகிய இடங்களில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இதற்கும்  வீட்டின் உரிமையாளரான தி.மு.க பிரமுகருக்கும்  தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்தும் வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave your comments here...