கோவிலில் இருந்து விநாயகர் மற்றும் அம்மன் சிலைகளை கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை..!

சமூக நலன்

கோவிலில் இருந்து விநாயகர் மற்றும் அம்மன் சிலைகளை கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை..!

கோவிலில் இருந்து விநாயகர் மற்றும் அம்மன் சிலைகளை கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை..!

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாரை அடுத்த சரக்கல்விளையில் சுயம்புலிங்க சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐம்பொன் மற்றும் பித்தளையால் ஆன விநாயகர் மற்றும் அம்மன் சிலைகள் உள்ளது. இந்த சாமி சிலைகளுக்கு தினமும் காலை, மாலை நேரங்களில் வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெறும்.

இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு இக்கோவிலில் உள்ள சாமி சிலைகளுக்கு பூஜை நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை முடிந்த பின்பு கோவில் பூசாரி, கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலையில் அவர் வழக்கம் போல கோவிலுக்கு வந்தார். வாசலை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த விநாயகர் மற்றும் அம்மன் சிலைகள் மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த கோவில் பூசாரி இது பற்றி கோவில் நிர்வாகிகளுக்கு தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் சம்பவம் குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தனர்.

இதனையடுத்து கோட்டார் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். கோவிலில் நேற்று பூஜை முடிந்த பின்பு யாரோ மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த விநாயகர் மற்றும் அம்மன் சிலைகளை கொள்ளை அடித்து சென்றிருந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் இருக்கிறதா? என விசாரித்தனர். இதில் கோவில் அருகே உள்ள ஒரு வீட்டில் கண்காணிப்பு காமிரா இருப்பது தெரியவந்தது.

அக்காமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் கோவிலில் சாமி சிலைகளை திருடிய நபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave your comments here...