குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு: கோவாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் 4 பேர் விலகினார்..!

இந்தியா

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு: கோவாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் 4 பேர் விலகினார்..!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு: கோவாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் 4 பேர் விலகினார்..!

குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமான தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டம் காரணமாக இந்தியாவில் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இதன் மூலம் குடியுரிமை பெற முடியும். அதேபோல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் மட்டுமே இங்கு குடியுரிமை பெற முடியும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவா காங்கிரசின் மூத்த தலைவர்கள் 4 பேர் கட்சியில் இருந்து விலகினர்.

பனாஜி காங்கிரஸ் பிளாக் கமிட்டி தலைவர் பிரஷாத் அமோன்கர், வடக்கு கோவா சிறுபான்மை தலைவர் ஜாவீத் ஷேக், பிளாக் கமிட்டி செயலாளர் தினேஷ் குபால், கோவா முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷிவ்ராஜ் தர்கர் ஆகிய நான்கு பேரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமோன்கர்:- குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். இந்த விவகாரத்தில் பொதுமக்களை குறிப்பாக சிறுபான்மை மக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது. காங்கிரஸ் எடுத்துள்ள தவறான நிலைப்பாட்டுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து தெரிவிக்கிறோம்” என்றார்.

Leave your comments here...