குடியுரிமை சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது: டில்லி ஜூம்மா மசூதி தலைவர் இமாம் சையது அகமது புஹாரி பேட்டி..!

இந்தியா

குடியுரிமை சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது: டில்லி ஜூம்மா மசூதி தலைவர் இமாம் சையது அகமது புஹாரி பேட்டி..!

குடியுரிமை சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது: டில்லி ஜூம்மா மசூதி தலைவர் இமாம் சையது அகமது புஹாரி பேட்டி..!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

Advertisement

டெல்லி உள்பட நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதைப் போல வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து டெல்லி ஜூம்மா மசூதி இமாம் சையது அகமது புஹாரி கூறியிருப்பதாவது:-

மக்கள் போராட்டம் நடத்துவது இந்திய மக்களின் ஜனநாயக உரிமை. இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், போராட்டங்களின் போது கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டியது முக்கியம். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் வித்தியாசம் உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டமாகி உள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, இன்னும் சட்டமாகவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள முஸ்லிம்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்காது. இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இமாம் சையது அகமது புஹாரி கூறியுள்ளார்.

Advertising

Leave your comments here...