இந்து இயக்க தலைவர்களுக்கு குறி….? உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்.!
![இந்து இயக்க தலைவர்களுக்கு குறி….? உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்.!](https://www.jananesan.com/wp-content/uploads/2019/12/dsc50613462045.jpg)
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை திருத்த சட்டம் வகை செய்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் சில்வர் கலர் ஆம்னி வேனில் 4 பேர் கொண்ட கும்பல் தமிழகத்தில் திருப்பூர், கோவையில் சுற்றி வருவதாக உள்துறைக்கு தகவல் வந்துள்ளது. அதில் தமிழகத்தில் 4 பேர் கொண்ட கும்பல் இந்து அமைப்பு பிரமுகர்களுக்கு குறி வைத்து அவர்களை பின் தொடர்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் சதி செயலில் ஈடுபட திட்டமிட்டு இருக்கலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. அவர்கள் காஜா மொய்தீன், அப்துல் சலீம், சையத் அலி நவாஸ், அப்துல் சமர் எனவும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் 4 பேரும் சேலத்தில் இருந்து கோவை வந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை தொடர்ந்து கோவையில் இந்து இயக்க பிரமுகர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களது வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட இந்து இயக்க தலைவர்கள் 30-க்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கோவை ரெயில் நிலையம், விமான நிலையத்திலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள போலீஸ் செக்போஸ்ட்களுக்கு, சம்பந்தப்பட்ட காரின் எண் குறித்து, போலீஸ் கட்டுப் பாட்டு அறை மூலம் தகவல் அளிக்கப்பட்டது. அனைத்து பகுதிகளிலும், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உஷாராக இருக்கவும் தீவிரமாக கண்காணிக்கவும் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் உளவுத்துறை சார்பில் கடிதம் அனுப்பியுள்ளது. முக்கிய விஐபிக்கள் தலைவர்கள் மற்றும் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
இவர்கள் பயங்கரவாதிகளா, வேறு ஏதேனும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களா என்பது குறித்த தகவல் இல்லை. இவர்கள் வலம் வருவதாக கூறப்படும் வாகன எண் உள்ளிட்ட விபரங்களை, மாவட்ட வாரியாக, போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்.பி., அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
Leave your comments here...