போலி இணையதளங்கள் – திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரி மாற்றம்..!

ஆன்மிகம்

போலி இணையதளங்கள் – திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரி மாற்றம்..!

போலி இணையதளங்கள்    – திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரி மாற்றம்..!

கடந்த சில மாதங்களாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெயரில் பல போலி இணையதளங்கள் உருவாக்கப்பட்டு, பல மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் திருமலை குறித்த பல தவறான தகவல்களையும் வெளியிட்டு பக்தர்களை குழப்பி வந்தனர்.

இது போன்ற தவறான தகவல்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவ்வப் போது மறுப்பும் விளக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த போலி இணையதளங்களை முடக்குவதுடன், கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியும் நடந்து வருகிறது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்லும் கோவிலாகும். இதனால் பக்தர்களின் வசதிக்காக தரிசன டிக்கெட், தங்கும் இடம், திருமலையில் நடக்கும் பல்வேறு சேவைகளில் கலந்து கொள்வதற்கான டிக்கெட் உள்ளிட்டவற்றை ஆன்லைனிலேயே கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்வதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது.திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளம் வழியாக பக்தர்கள் தரிசன டிக்கெட்களை முன்பதிவு செய்து வந்தனர். அதோடு திருமலையில் நடக்கும் உற்சவங்களின் விபரம், மாற்றம் செய்யப்படும் உற்சவங்களின் நேரம் மற்றும் தேதிகளையும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது.

ஆனால் கடந்த சில மாதங்களாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெயரில் பல போலி இணையதளங்களில் இயங்கி வருவது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஐடி குழு சார்பில் கண்டறியப்பட்டு, அது தொடர்பாக திருமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அதைத் தடுக்கும் வகையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை https://ttdevasthanams.ap.gov.in என மாற்றி அறிவித்துள்ளது.

Leave your comments here...