குமரியில் தொடரும் கோவில் சிலை திருட்டு: சொத்தவிளை சிவன் கோவிலில் வெண்கல முருகன் சிலை மாயம்: போலீசார் விசாரணை..!

தமிழகம்

குமரியில் தொடரும் கோவில் சிலை திருட்டு: சொத்தவிளை சிவன் கோவிலில் வெண்கல முருகன் சிலை மாயம்: போலீசார் விசாரணை..!

குமரியில் தொடரும் கோவில் சிலை திருட்டு: சொத்தவிளை சிவன் கோவிலில் வெண்கல முருகன்  சிலை மாயம்: போலீசார் விசாரணை..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாக கொள்ளையர்கள் தொடர்ச்சியாக கோவில்களை குறி வைத்து கைவரிசை காட்டி வருகின்றனர். நாகா்கோவிலை அடுத்த சொத்தவிளை அருகேயுள்ள ஒசர விளையில் குமரேசன் தாழை சிவாலயம் உள்ளது. பழமையான இக்கோயிலில் சிவன், பெருமாள் சன்னதிகள் உள்ளது. இங்கு ராஜேஷ் (28) என்பவா் பூசாரியாக உள்ளாா். இவா் இல்லாத வேளையில் இவரது தாத்தா ராமன்நாடாா் (85) பூஜைகள் செய்வாராம். கோயில் நடை தினமும் காலை 6 மணிக்கு  பூஜை  செய்வதகாக  திறப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை ராமன் கோவிலின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்ற போது, கோவிலின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு பெருமாள் சன்னதியில் வைத்திருந்த வெண்கல முருகன் சிலையை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து  பெருமாள் சாமி  சன்னதியில் இருந்த 1.75 அடி உயரமும், 12 கிலோ எடையும் உள்ள வெண்கல முருகன்  சிலை மாயமாகி இருந்தது. இந்த கொள்ளை குறித்து சுசீந்திரம் போலீசில் ராஜேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதைப்போல்  கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சொத்தவிளை கடல் அருகில் தர்மபதி உள்ளது. அதன் முன்பக்க இரும்பு கதவில் 2 பூட்டுகள் பூட்டப்பட்டு இருந்தன. அதில் ஒன்றை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இன்னொரு பூட்டை உடைக்க முடியாததால், மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கொள்ளை முயற்சி நடந்த கோவிலையும் போலீசார் பார்வையிட்டனர். மேலும் தொடா்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனா்.

Leave your comments here...