முரசொலி அலுவலகம் பஞ்சமி நில விவகாரம் – திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

அரசியல்தமிழகம்

முரசொலி அலுவலகம் பஞ்சமி நில விவகாரம் – திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

முரசொலி அலுவலகம் பஞ்சமி நில விவகாரம் –  திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. பஞ்சமி நிலத்தை அபகரித்து முரசொலி அலுவலகம் கட்டப்பட்டதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து தி.மு.க தரப்பு முரசொலி அலுவலகம் தொடர்பாகச் சில ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிட்டது. முரசொலி நிலம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஆர்.சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் தெரிவித்தார்.

இந்தப் புகார் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் என்ற வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடந்த மாதம் 19ஆம் தேதி ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க பாஜக தரப்பிலும், தலைமைச் செயலாளர் தரப்பிலும் அவகாசம் கேட்கப்பட்டது.

ஜனவரி மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டெல்லியிலுள்ள பட்டியலினத்தவர் ஆணையத்தில் ஜனவரி 7ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதே நாளில் புகார்தாரரான  சீனிவாசன், தலைமைச் செயலாளர் ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Leave your comments here...