பொதுசொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கியால் சுடுங்கள்: மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி

இந்தியா

பொதுசொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கியால் சுடுங்கள்: மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி

பொதுசொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கியால் சுடுங்கள்: மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி

குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமான தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் டெல்லி, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டம் நடத்தி கலவரத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிஅவர்கள் கூறியது:-

 மாநிலங்களில் பல்வேறு பிரச்னைகளுக்காக போராடுபவர்கள் போராட்டத்தின் போது பொதுச்சொத்துக்களை சேதம் விளைவிப்பர் .அவ்வாறு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே அதிகாரிகள் அதே இடத்தில் சுட்டு தள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன். இது வரி செலுத்துவோரின் பணம், ஒரு ரயிலை உருவாக்க பல வருடங்கள் ஆகும். வன்முறையில் ஈடுபடுவோர் மீது வல்லபாய் படேல் போன்று அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

Leave your comments here...