பத்து நாளில் 3.5லட்சம் பேர் காவலன் செயலி ஆப் பதிவிறக்கம்: சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்..!

சமூக நலன்தமிழகம்

பத்து நாளில் 3.5லட்சம் பேர் காவலன் செயலி ஆப் பதிவிறக்கம்: சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்..!

பத்து நாளில் 3.5லட்சம் பேர் காவலன் செயலி ஆப் பதிவிறக்கம்: சென்னை காவல்  ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்..!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது கல்லூரி மாணவர்கள் மத்தியில்  பேசிய அவர்:- பெண்கள் பாதுகாப்பு மிக முக்கியம் என காவல்துறை கருதுகிறது என்றார்.

மேலும் இணையத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும், முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் பழகும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தெரிவித்தார். சென்னை முழுவதும் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், உலக அளவில் பொதுமக்களின் பங்களிப்போடு இத்தனை லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள ஒரே நகரம் சென்னை தான் என்றும் அவர் கூறினார்.

மேலும் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், டிசம்பர் 5 முதல் 15ஆம் தேதிக்குள் 10 நாட்களில் சுமார் 3.5 லட்சம் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்

Leave your comments here...