மதுக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா, விலைப்பட்டியல் பொருத்தப்படும் – அமைச்சர் முத்துசாமி..!

தமிழகம்

மதுக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா, விலைப்பட்டியல் பொருத்தப்படும் – அமைச்சர் முத்துசாமி..!

மதுக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா, விலைப்பட்டியல் பொருத்தப்படும் – அமைச்சர் முத்துசாமி..!

மதுவிற்கு கூடுதல் கட்டணமாக ஒரு ரூபாய் கூட வசூலிக்க கூடாது எனவும் அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் விலைப்பட்டியல் பொருத்தப்படும் எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் டாஸ்மாக் சங்கத்தினருடன் அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் டாஸ்மாக் சங்கங்களின் கோரிக்கைகள், கடைகளை சுகாதாரமாக வைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யாமல் இருப்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி பேட்டி:- ”21 சங்கங்கள் எழுத்துப்பூர்வமாக மொத்தம் 55 கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதில் 39 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மற்ற கோரிக்கைகள் குறித்து வரும் கூட்டங்களில் ஆலோசிக்கப்படும். மது கடைகள் இருக்கும் இடத்தில் வாடகை பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. அதற்கு வாடகையை ஒழுங்கு செய்து தொழில்களில் பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்சார கட்டணத்தை பொருத்தவரை பல கடைகளில் அதற்கான தனி மீட்டர் இல்லாமல் இருந்தது. மின்கட்டணம் அதிகமானால் தொழிலாளிகள் பணம் கட்டும் நிலைமை இருந்தது. அந்தநிலை மாற்றியமைக்கப்படும். தற்போது 3,500 கடைகளில் கண்காணிப்பு கேமரா உள்ளது. இதுபோல் மேலும் 500 கடைகளில் கேமரா பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பணத்தை வைக்க பாதுகாப்பு பெட்டகம் வரும் காலத்தில் அனைத்து கடைகளிலும் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகளில் தொழிலாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுவயதில் இருப்பவர்கள் முதல் முறை கடைக்கு வருபவர்களை அந்த பழக்கத்தில் இருந்து தடுக்க வேண்டும் என்பதால், அந்த நபரின் நம்பரை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்து விட்டால் அந்த நபர்களுக்கு இரண்டு முறை கவுன்சிலிங் கொடுக்கப்படும். இதை யார் செய்கிறார்களோ அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நடத்தும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஊக்கத்தொகை கொடுக்கப்படும்.

விலை பட்டியல் அனைத்து மது கடைகளிலும் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பெரிய திட்டமாக எல்லா நடவடிக்கைகளும் கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கப்படும். இனிமேல் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் கூட வாங்க கூடாது என்று சொல்லி இருக்கிறோம். டெட்ரா பேக் குறித்து கமிட்டி அமைத்துள்ளோம். அவர்கள் 4 மாநிலங்களுக்கு சென்று ஆய்வு செய்வார்கள். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்

Leave your comments here...