சிவகாசி அருகே வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு..!

சமூக நலன்

சிவகாசி அருகே வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு..!

சிவகாசி அருகே வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு..!

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி இருந்த மற்றுமொரு தொழிலாளியின் உடல் 10 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது.

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சரவணன்(55). இவர் செங்கமலப்பட்டி அருகே நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) உரிமம் பெற்று சுதர்சன் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட அறைகளில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது, மற்றொரு 7 அறைகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 உயிரிழந்தனர். இதில் ஒரு தொழிலாளியின் உடல் பட்டாசு ஆலையில் இருந்து 100 மீ தூரத்தில் இருந்து மீட்கப்பட்டது. காயமடைந்த 11 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில், 3 பேர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

7 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட உடல்: வெடி விபத்தில் ஒரு அறையில் தொடர்ந்து புகை வந்து கொண்டே இருந்ததால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது. மதியம் 2 மணிக்கு வெடி விபத்து நடந்த நிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு மீட்பு பணிகள் நடந்தது. இரவு 9 மணி அளவில் இடிபாடுகளில் சிக்கி இருந்த தொழிலாளி அழகர்சாமியின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. அந்த கட்டிடத்தில் மேலும் இருவர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இறந்தவர்கள் பெயர் விபரம்: மத்தியசேனை சந்திரசேகர் மகன் ரமேஷ்(31), சந்திவீரன் மனைவி வீரலட்சுமி(48), வி.சொக்கலிங்கபுரம் குருசாமி மகன் காளீஸ்வரன்(47), சிவகாசி ரிசர்வ்லைன் மச்சக்காளை மனைவி முத்து(52), மாயாண்டி மனைவி ஆவுடையம்மாள்(75), சக்திவேல் மனைவி வசந்தி(38), இந்திரா நகர் கணேசன் மனைவி பேச்சியம்மாள் (எ) ஜெயலட்சுமி(22), லட்சுமி(43), விஜயகுமார்(30), மத்திய சேனையை சேர்ந்த கீதாரி மகன் அழகர்சாமி ஆகிய 10 பேர் உயிரிழந்தனர்.

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிவகாசி அருகே ரிசர்வ்லைன் அய்யம்பட்டியை சேர்ந்த ஆவுடையம்மாள், அவரது மகள் முத்து, மருமகள் பேச்சியம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள் விபரம்: சிவகாசி ரிசர்வ் லைன் மாரீஸ்வரன் மனைவி மல்லிகா(35), மூக்கன் மகன் திருப்பதி(47), மகாலிங்கம் மகன் கண்ணன்(30), ஆலமரத்துப்பட்டி லட்சுமணன் மகன் சுப்புலட்சுமி(62), அய்யம்பட்டி ராமமூர்த்தி மனைவி நாகஜோதி(35), சித்திவிநாயகர் மனைவி மாரியம்மாள்(50),மத்தியசேனை செல்வம் மனைவி இந்திரா(48), ரெங்கசாமி மகன் ஜெயராஜ்(42), முருகன் மனைவி ரெக்கம்மாள்(40), பெருமாள் மகன் அழகுராஜா(30), அழகுராஜா மகன் அம்சவல்லி(32), சுரேஷ் மனைவி செல்வி(39), நாச்சான் மனைவி வீரலட்சுமி(35), ராஜாமணி மகன் மோகன்ராஜ்(35) ஆகியோர் காயமடைந்தனர்.

விபத்து நடந்த பட்டாசு ஆலையில் ஆய்வு விருதுநகர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா அளித்த பேட்டி: சிவகாசி செங்கமலப்பட்டியில் வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் சரவணன், போர்மேன், மற்றும் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது. இந்த பட்டாசு ஆலை விதிகளை மீறி ஒப்பந்ததாரர் மூலம் செயல்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை உரிமம் 2026 வரை உள்ளது. தொடர்ந்து விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என கூறினார்.

இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், மேலாளர், போர்மேன் மற்றும் மாலையை லீசுக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன் ஆகிய 4 பேர் என் மீது சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave your comments here...