அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது – அண்ணாமலை

அரசியல்

அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது – அண்ணாமலை

அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது – அண்ணாமலை

என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபயணம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்தான ‘எங்களுக்கு மோடி ஜி, நட்டா ஜி, அமித்ஷா ஜி தான் எல்லாம். அண்ணாமலையெல்லாம் ஜஸ்ட் லைக்… அவ்வளவுதான்’ என பேசியிருந்தது பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது. மேலும் நாங்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. மக்களை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம். மக்களே எங்களுக்கு எஜமானர்கள். மெஜாரிட்டி, மைனாரிட்டி பாலிடிக்ஸ் தான் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது. மைனாரிட்டி, மெஜாரிட்டி என்பது ஒரு புரிதலுக்காக கொண்டு வரப்பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மைனாரிட்டி என்ற வார்த்தைகளுக்கு மட்டும்தான் சிறப்பு சலுகைகள் உள்ளன” என தெரிவித்தார்.

முன்னதாக நேற்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, ”அண்ணாமலை எங்களுக்கு “Just like” அவ்வளவு தான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிச்சாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை?” என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில்தான் செல்லூர் ராஜூவின் பேச்சுக்கு பதிலடியாக, “அவருக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது” என அண்ணாமலை பேசியுள்ளார். இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக – பாஜக உறவில் விரிசல் இருப்பதாக செய்திகள் உலாவும் நிலையில் அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்து எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது

Leave your comments here...