போலி இணையதளங்கள் – திருப்பதி கோயிலுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் எச்சரிக்கை..!

ஆன்மிகம்இந்தியாசமூக நலன்

போலி இணையதளங்கள் – திருப்பதி கோயிலுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் எச்சரிக்கை..!

போலி இணையதளங்கள்  – திருப்பதி கோயிலுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் எச்சரிக்கை..!

திருப்பதி ஏழுமலையான் சுவாமி கோயிலுக்கு தினமும் சுமார் 75,000 பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலுக்கு கடந்த ஆண்டு 2.37 கோடி பக்தர்கள் வருகை தந்துள்ளனர். பக்தர்கள் காணிக்கையாக ரூ.1450.41 கோடி அளித்துள்ளனர் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க திருப்பதி கோயிலில் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனிலும் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட்டுகள் ரூ.300 ஆக தற்போது இருந்து வருகிறது. இந்த நிலையில் பல போலி இணையதளங்கள் சிறப்பு தரிசனம் மற்றும் பிற சேவைகள் தொடர்பான டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக கோயில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

இந்த போலி தளங்கள், முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு போலியாக டிக்கெட்டுகள் வழங்குவது அல்லது கோயில் கவுன்ட்டர்களில் சென்று டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளுங்கள் என வலியுறுத்துகின்றன.பக்தர்களிடமிருந்து பல புகார்கள் வந்ததையடுத்து, தேவஸ்தான அதிகாரிகள் கடந்த மாதம் போலி இணையதளங்களை தடுப்பது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து போலீசார் அதிரடியாக களமிறங்கி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகின. திருப்பதி ஏழுமலையின் கோயில் பெயரில் போலி இணையதளங்கை தொடங்கி பெரும் மோசடியில் ஈடுபட்டு வருவது போலீசார் நடத்திய சோதனையில் தெரிய வந்தது. தேவஸ்தானம் அளித்த புகாரில் இதுவரை 41 இணையதளங்கள் அடையாளம் காணப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச கும்பல்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். குறைந்தது 41 போலி இணையதளங்கள் மற்றும் 13 மொபைல் செயலிகளும் அடையாளம் காணப்பட்டு அவை போலிசாரால் முடக்கப்பட்டுள்ளன. எனவே அடுத்த முறை உங்கள் வாட்ஸ்அப்பில் யாராவது உங்களுக்கு திருப்பதி தரிசனத்திற்கான நுழைவுச்சீட்டை பெறலாம் என்று பகிர்ந்தால் மக்களே உசாராக இருங்கள். போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்.

Leave your comments here...