தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே பாஜக வளர முடியும்- சுப்பிரமணியன் சுவாமி

அரசியல்தமிழகம்

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே பாஜக வளர முடியும்- சுப்பிரமணியன் சுவாமி

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே பாஜக வளர முடியும்- சுப்பிரமணியன் சுவாமி

அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டால் தான் பாஜக வளரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேறு மாநிலங்களில் உள்ளது போல் தமிழக பா.ஜ.க. பணிகள் எதுவும் செய்வதில்லை. திமுக, அதிமுக என கூட்டணி வைத்து அரசியல் செய்ய கூடாது. பா.ஜ.க. தனியாக நிற்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டால் தான் பா.ஜ.க. வளர்வதாக அர்த்தம் என்று தெரிவித்தார்.

திமுக கொள்கை வழியாக எதுவும் இல்லை. நாட்டை பிரிக்க வேண்டும் என்பதற்காக பேசி கொண்டே இருக்கும். ஆனால் தேர்தல் வரும் போது வேறு மாதிரியாக பேசுவார்கள். தமிழகத்தில் ஒரு முறை ஆட்சியை கலைத்தேன். அப்போது ரத்த ஆறு ஒடும் என்றார்கள். ஆனால் பூனை குட்டி கூட வெளியே வரவில்லை. கோவில்களில் அராஜகம் செய்தால் தட்டி கேட்பேன் என்றனர். கோவில் பூசாரிகளை திராவிடர் கழகம் மூலமாக தொல்லையாக இருப்பதாக கூறப்படுகிறது என்று கூறினார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், மீண்டும் மோடி பிரதமராக வருவார் என்பதை எப்படி சொல்ல முடியும். பிரதமர் வேட்பாளராக மோடியை கட்சி தலைமை அறிவிக்க வேண்டும். இதுவரை அப்படி எதுவும் முடிவாகவில்லை என்று கூறினார். மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் இணைந்தால், ஏற்கனவே இருக்கின்ற வாய்ப்பையும் ராகுல்காந்தி இழந்து விடுவார் என விமர்சனம் செய்தார்.

Leave your comments here...