பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்தநாள்; பிரதமர் மோடி நேரில் வாழ்த்து.!

அரசியல்

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்தநாள்; பிரதமர் மோடி நேரில் வாழ்த்து.!

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்தநாள்; பிரதமர் மோடி நேரில் வாழ்த்து.!

பாஜகவின் மூத்த தலைவர்களில் எல். கே. அத்வானி குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர். பல்வேறு யாத்திரைகளை நடத்தி, பாரதிய ஜனதா கட்சியினை ஆட்சிப் பொறுப்பிற்கு கொண்டுவந்த பெருமை இவரையே சாரும். அதேசமயம், இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பான “ஆர்.எஸ்.எஸ்”-இன் தீவர கொள்கையாளர் ஆவார்.

இவர் வாஜ்பாய் பிரதமராக இருந்த 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணியாற்றியுள்ளயார். 1977 முதல் 1979 வரை இந்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும், 1966, 1998-1999, 1999-2004ம் ஆண்டுகளில் இந்திய உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்தியாவில் சுமார் 17 மாநிலங்களில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. இந்தியாவில் பாஜக தற்போது அதீத வளர்ச்சியடைந்துள்ளது. பாஜகவின் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டவர் எல்.கே.அத்வானி ஆவார். எல்.கே.அத்வானியின் 96வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


இந்நிலையில் டெல்லியில் உள்ள அத்வானியின் வீட்டிற்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

Leave your comments here...