குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் – ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதான் காட்வி அறிவிப்பு..!

அரசியல்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் – ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதான் காட்வி அறிவிப்பு..!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் – ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதான் காட்வி அறிவிப்பு..!

குஜராத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறை களம் இறங்கும் ஆம் ஆத்மி கட்சியில் முதலமைச்சர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.

குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் முறையாக குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலைச் சந்திக்க உள்ளது. இதானல் குஜராத்தில் இந்த முறை பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி என்ற மும்முனை போட்டி நிலவுகிறது. இதனிடையே, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின் போது அந்த கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது பலருக்கும் எதிர்ப்பார்வை ஏற்படுத்தியது.

ஆம் ஆத்மியின் குஜராத் முதலமைச்சர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது குறித்து குஜராத் மக்களே தீர்மானிக்கலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இதற்காக தொலைபேசி எண் கொடுத்து அதன் மூலம் மக்கள் விருப்பம் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை இன்று அறிவிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

அதன்படி குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக இசுதன் காத்வியை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியலில் குஜராத் மாநில தலைவர் கோபால் இதாலியா, தேசிய பொதுச்செயலாளர் இசுதன் காத்வி, பொதுச் செயலாளர் மனோஜ் சோராதியா உள்ளிட்டோர்களின் பெயர்கள் இருந்த நிலையில், முதலமைச்சர் வேட்பாளராக பொதுச்செயலாளர் இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.40- வயதான இசுதான் கத்வி , ஆம் ஆத்மி கட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சேர்ந்தார். அரசியலில் குதிப்பதற்கு முன்பாக குஜராத்தில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளராக இசுதான் காத்வி இருந்தார்.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு கடந்த 2017 ல் நடந்த தேர்தலில் பாஜக 99 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 5 முறை ஆட்சியில் இருந்துவிட்ட பாஜக 6-வது முறையாகவும் ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் உள்ளது.

Leave your comments here...