குஜராத் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது..!

இந்தியா

குஜராத் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது..!

குஜராத் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது..!

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

தீவிரவாத தடுப்பு பிரிவினர் அவர்களுக்கு கிடைத்த உளவுத்துறை தகவலின்படி நடத்திய அடிப்படையில் சென்னையில் இருந்து ஆமதாபாத் வந்த 4 தீவிரவாதிகளை கைது செய்தனர்.

அவர்கள் 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் பாகிஸ்தானில் அவர்களது அமைப்பினரிடமிருந்து அடுத்த கட்ட தகவலுக்காக காத்திருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களது புகைப்படங்களை தீவிரவாத தடுப்பு பிரிவினர் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...