2026 தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்து முதல்வராக அண்ணாமலை பதவி ஏற்பார் – மதுரை டாக்டர் சரவணன்..!
- June 5, 2022
- jananesan
- : 566
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட க உதவிகள் வழங்கியும், கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பொதுமக்கள் அன்னதானம் நடைபெற்றது .
அதன் ஒரு பகுதியாக, மதுரை பாரதிய ஜனதா கட்சியின் ஒ.பி.சி. அணி சார்பாக , மதுரை காந்தி மிஷன் அருகே உள்ள பூங்கா முருகன் கோயிலில், பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில், பாரதிய ஜனதா கட்சி யினர் மதுரை பூங்கா முருகன் கோயில் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் ,முருகனின் தங்கத்தேர் இழுத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் .இதில், பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .
பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் செய்தியாளர் கூறும்போது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் சிங்க தமிழர் நாளைய தமிழக முதல்வர் அண்ணாமலை அவருடைய பிறந்த தினத்தை மதுரை மாநகர் பாஜக இன்று மதுரையில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியும் பிரார்த்தனை செய்தும் இன்று பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக இன்று OBC அணியின் மாவட்ட தலைவர் சரவண குமார் நிர்வாகி ஏற்பாட்டில் இன்று பூங்கா முருகன் கோயில் தங்கத்தேர் இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி எங்கள் மாநிலத் தலைவர் நீண்ட ஆயுள் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் தன்னுடைய சமூகப்பணியில் செய்வதற்கு இறைவனை அனைவரும் வேண்டினோம்.
இன்னும் வரக்கூடிய காலங்களில் தமிழகத்தில் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக வழிநடத்தி 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஆட்சி அமைத்து முதல்வராக பொறுப்பேற்று இன்று திராவிட முன்னேற்ற கழக செய்யக்கூடிய அனைத்து ஏமாற்று வேலைகளில் புறம்தள்ளி ஊழலற்ற நிர்வாகத்தை எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தருவார் என்று நம்பிக்கையுடன் அது நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம் இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி : Madurai -Ravichandran
Leave your comments here...