தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்காமல் அவமதிப்பு – ஆர்பிஐ அதிகாரிகள் மீது போலீசில் புகார்..!

தமிழகம்

தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்காமல் அவமதிப்பு – ஆர்பிஐ அதிகாரிகள் மீது போலீசில் புகார்..!

தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்காமல் அவமதிப்பு – ஆர்பிஐ அதிகாரிகள் மீது போலீசில் புகார்..!

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆன்லைன் மூலம் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் அளித்துள்ளார்.

நாட்டின் 73-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் இன்று அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு அரசாணையை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார் அவர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நிற்காத அதிகாரிகளுக்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.தமிழ்நாடு அரசு சார்பில், கடந்த டிசம்பரில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டுமென்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...