புலிகள் எண்ணிக்கை இருமடங்கு உயர்த்தி சாதனை – சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு சர்வதேச விருது

உலகம்தமிழகம்

புலிகள் எண்ணிக்கை இருமடங்கு உயர்த்தி சாதனை – சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு சர்வதேச விருது

புலிகள் எண்ணிக்கை இருமடங்கு உயர்த்தி சாதனை –  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு சர்வதேச விருது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு சர்வதேச அளவிலான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.உலகிலேயே 10 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்திய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருதான டிஎஸ்2 என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.

நீலகிரி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 1455 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சத்தியமங்கலம் வனவிலங்குகள் சரணாலயம், 2013ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக் கப்பட்டது. அப்போது சுமார் 30 புலிகள் இருந்ததாக அப்போதையை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

அடர்ந்த காடு, நீரோடைகள், புலிகள் வாழ்வதற்கான தட்பவெப்பநிலை கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. அதேபோல் இந்த புலிகள் காப்பகத்தையொட்டி முதுமலை, பந்திப்பூர், பிஆர்ஹில்ஸ், ஈரோடு மற்றும் கோவை வனப்பிரிவு,மலை மதேஸ்வரர் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளதால் புலிகள் எளிதாக பிறஇடங்களுக்கு புலம்பெயர்ந்து இரை தேடியும் புதிய எல்லையை பிரவேசிக்கவும் இயலுகிறது. இதனால் புலிகள் எண்ணிக்கை தற்போது இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.

2013ம் ஆண்டு 30 புலிகளாக இருந்த காப்பகத்தில் தற்போது 80 புலிகள் உள்ளது தெரியவந்துள்ளது. உலகளவில் புலிகளை பாதுகாப்பதற்கு ரஷ்யா, சைனா, இந்தோனேஷியா, பங்களாதேஸ் உள்ளிட்ட 13 நாடுகளில் உள்ள கன்சர்வேஷன் அண்டு டைகர் டைகர் ஸ்டேன்டேடு, வேல்டு லைப் கன்சர்வேஷன் ஆப் சொசைட்டி, உலகளாவிய நிதியகம் என 13 அமைப்புகள் கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளன. இந்த கூட்டமைப்பு 2010ம் ஆண்டு 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தும் நோக்கில் அமைக்கப்பட்டது.

2022ம் ஆண்டில் இருமடங்காக உயரத்திய நாட்டிக்கு டிஎஸ்2 எனும் சர்வதேச விருது வழங்க கூட்டமைப்பு அறிவித்தது.இதன்படி சர்வசேத அளவில் 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தியதற்காக டிஎஸ்2 என்ற விருதை முதல் பரிசாக இந்தியாவில் தமிழகத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கும், இரண்டாவது விருதாக நேபாளம் பார்டியா தேசிய பூங்காவுக்கும் வழங்கியுள்ளது.

தமிழக அரசின் ஒத்துழைப்பு, வனத்துறையின் முயற்சி பழங்குடியின மக்களின் ஆதரவு போன்வற்றால் புலிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தாண்டு கொரானா பிரச்சனை காரணமாக ஆன் லைன் கானொளி மூலம் தமிழக அரசுக்கு இந்த விருதை கூட்டமைப்புகள் வழங்குகின்றன.

Leave your comments here...