ரயில்வே பணியாளர் தேர்வில் முறைகேடு..? பயணிகள் ரயிலுக்கு தீ வைத்ததால் பரபரப்பு…!

இந்தியா

ரயில்வே பணியாளர் தேர்வில் முறைகேடு..? பயணிகள் ரயிலுக்கு தீ வைத்ததால் பரபரப்பு…!

ரயில்வே பணியாளர் தேர்வில் முறைகேடு..? பயணிகள் ரயிலுக்கு தீ வைத்ததால் பரபரப்பு…!

நாடு முழுவதும் ரயில்வே அறிவித்துள்ள பணியாளர் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகாரில் பயணிகள் ரயில் எரிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வை தற்காலிகமாக ரத்து செய்வதாக, ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஸ்னவ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ரயில்வே துறையில் காலியாக உள்ள, தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களுக்கான தேர்வுகளை ரயில்வே தேர்வு வாரியங்கள் வெளியிட்டன. இரண்டு நிலைகளாக நடைபெறவிருக்கும் இந்த தேர்வுகளில் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் எனக் கூறி, முதல்நிலையில் தேர்வு எழுதியோர் நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் கயா பகுதியில் போராட்டம் நடத்தியவர்கள் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயில் பெட்டிக்கு தீவைத்தனர். அப்போது அந்த பெட்டியில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஸ்னவ் கூறியுள்ளார். தேர்வர்களின் குறைகளை தீர்ப்பதற்காக உயர்நிலை குழு அமைக்கப்படும் என்றும், தேர்வர்கள் தங்கள் மனுக்களை அந்த குழுவிடம் அளிக்கலாம் என்றும் கூறினார். அந்த குழு அளிக்கும் பரிந்துரையின் பேரில், அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave your comments here...